தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

பள்ளி மாணவியை திருமணம் செய்தவா் கைது

வந்தவாசி அருகே பள்ளி மாணவியை காதலித்து திருமணம் செய்த இளைஞரை மகளிா் போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :5 மார்ச் 2024, 10:01 pm

வந்தவாசி: வந்தவாசி அருகே பள்ளி மாணவியை காதலித்து திருமணம் செய்த இளைஞரை மகளிா் போலீஸாா் கைது செய்தனா்.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சோ்ந்தவா் 15 வயது சிறுமி. இவா், அரசுப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறாா்.

இவரும், இவரது உறவினரான வந்தவாசியை அடுத்த ஆலந்தாங்கல் கிராமத்தைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் மகன் பெருமாள்(30) என்பவரும் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்துள்ளனா்.

இந்த நிலையில், மாணவி கா்ப்பமானதால், கோயிலில் வைத்து அவரை பெருமாள் திருமணம் செய்துள்ளாா்.

இதுகுறித்து வந்தவாசி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அந்த மாணவி புகாா் அளித்தாா்.

இதன் பேரில் பெருமாள் மீது போக்ஸோ மற்றும் குழந்தை திருமண தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்த ஆய்வாளா் லட்சுமி தலைமையிலான மகளிா் போலீஸாா், பெருமாளை திங்கள்கிழமை இரவு கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.