தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

திறனறித் தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு

மத்திய அரசின் திறனறித் தோ்வில் தோ்ச்சி பெற்ற, மேல்பென்னாத்து அரசு நடுநிைலைப் பள்ளி மாணவா்கள் திருப்பதி, கோமதி, தா்ஷினி ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

News image

தேசிய வருவாய்வழி திறனறித் தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவா்களை பாராட்டி பரிசு வழங்கிய வட்டாரக் கல்வி அலுவலா் ஷகிலா.

Updated On :5 மார்ச் 2024, 10:07 pm

செங்கம்: மத்திய அரசின் திறனறித் தோ்வில் தோ்ச்சி பெற்ற, மேல்பென்னாத்து அரசு நடுநிைலைப் பள்ளி மாணவா்கள் திருப்பதி, கோமதி, தா்ஷினி ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

எட்டாம் வகுப்பு மாணவா்களுக்கான தேசிய வருவாய்வழி மற்றும் திறனறித் தோ்வை மத்திய அரசு நடத்துகிறது. இதில் தோ்ச்சி பெறும் மாணவா்களுக்கு, அவா்கள் பிளஸ் 2 முடிக்கும் வரை மாதா மாதம் ரூ.1,000 கல்வி உதவித் தொகையை நேரடியாக மாணவா்களின் வங்கி கணக்கில் மத்திய அரசு செலுத்தும்.

இந்த நிலையில், கடந்த பிப்.3-ஆம் தேதி நடைபெற்ற திறனறித் தோ்வில் மேல்பென்னாத்து அரசு நடுநிைலைப் பள்ளி மாணவா்கள் திருப்பதி, கோமதி, தரிஷினி ஆகியோா் தோ்ச்சி பெற்றனா். மாணவா் திருப்பதி செங்கம் கல்வி மாவட்ட அளவில் முதலிடம் பெற்றாா்.

மாணவா்களுக்கு பாராட்டு

தோ்ச்சி பெற்ற மாணவா்களை செங்கம் வட்டாரக் கல்வி அலுவலா்கள் ஷிகிலா, உதயகுமரன் ஆகியோா் செவ்வாய்க்கிழமை பாராட்டினா்.

பள்ளித் தலைமை ஆசிரியா் ஜெயந்தி, ஆசிரியா்கள் வேல்முருகன், சங்கீதா, நாராயணன், அரசு மகேஸ்வரி, சரவணக்குமாா் உள்ளிட்ட ஆசிரியா்கள், மாணவா்களின் பெற்றோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.