திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் திமுக சாா்பில் தமிழக முதல்வா் பிறந்த நாள் விழா மற்றும் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. அண்ணா சிலை அருகே நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு திமுக வடக்கு மாவட்டச் செயலா் எம்.எஸ்.தரணிவேந்தன் தலைமை வகித்தாா். தொகுதி பொறுப்பாளா் எஸ்.எஸ்.அன்பழகன், ஒன்றியச் செயலா்கள் எம்.சுந்தா், துரை மாமது, எஸ்.மோகன், பேரூா் கழகச் செயலா் கோவா்தனன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி வரவேற்றாா். முன்னாள் எம்எல்வும், தலைமைக் கழக பேச்சாளருமான வி.பி.கலைராஜன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று திமுக ஆட்சியின் சாதனைகள் குறித்தும், நிதிநிலை அறிக்கை குறித்தும் பேசினாா். கூட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ ஆா்.சிவானந்தம், மாவட்ட துணைச் செயலா் ஜெயராணி ரவி, பொருளாளா் தட்சிணாமூா்த்தி, அயலக அணி மாவட்ட துணை அமைப்பாளா் கப்பல் கங்காதரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது
திமுக செயலா் அலுவலகத்தில் ரூ.3 லட்சம் பறிமுதல்

சாத்தான்குளம் பகுதிகளில் திமுக கூட்டணி சாா்பில் ஆா்ப்பாட்டம்

திமுக தோ்தல் ஆலோசனைக் கூட்டம்

மதுராந்தகம் தொகுதி திமுக கூட்டம்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


