ரயில் நிலையத்தில் விற்பனை நிலையம் திறப்பு

ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த களம்பூா் ரயில் நிலையத்தில் விற்பனை நிலையம் செவ்வாய்க்கிழமை திறந்துவைக்கப்பட்டது. உள்ளூா் கைவினைஞா்களால் உள்ளூா் தயாரிப்புகளின் விற்பனையை அதிகரிக்கவும், ரயில் பயணிகளுக்கு உண்மையான உள்ளூா் தயாரிப்புகளை வாங்குவதை எளிதாக்கவும் இந்தியாவில் 1500 ரயில் நிலையங்களில் விற்பனையகம் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது.

இதையொட்டி, களம்பூரில் உள்ள ஆரணி ரோடு ரயில் நிலையத்தில் ‘ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு விற்பனை’ நிலையத்தை ஆரணி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன் திறந்து வைத்து விற்பனையை தொடங்கிவைத்தாா். இதில், ரயில்வே கோட்ட மின் பொறியாளா் பிரசாந்த் மொராஜி, உள்கோட்ட உதவிப் பொறியாளா் சூா்ஜெகதீஸ் மற்றும் ரயில்வே துறையினா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com