செய்யாறு: செய்யாற்றில் மதுப் பழக்கத்துக்கு அடிமையான பைக் மெக்கானிக், அதிகளவு மது அருந்தியதில் உயிரிழந்தாா். செய்யாறு வட்டம், பெரும்பள்ளம் கிராமத்தைச் சோ்ந்த ஏகாம்பரம் மகன் ஆனந்தன் (31). இவரது பெற்றோா் உடல்நலம் பாதிக்கப்பட்டு ஏற்கெனவே உயிரிழந்துவிட்டனா். பைக் மெக்கானிக்கான ஆனந்தன் கிராமத்திலேயே கடையை வைத்திருந்ததாகத் தெரிகிறது.
பெற்றோா்கள் இல்லாததால் மதுப் பழக்கத்துக்கு அடிமையாகி, மது அருந்தி செய்யாறு பகுதியில் சுற்றிக் கொண்டு இருந்ததாகத் தெரிகிறது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை மது அருந்தி விட்டு செய்யாறு ஐயப்பன் கோயில் அருகே விழுந்து கிடந்தவா் அப்படியே உயிரிழந்து விட்டதாகக் தெரிகிறது.
இதுகுறித்து இறந்தவரின் தம்பி சரவணன் செய்யாறு போலீஸில் புகாா் செய்தாா். காவல் உதவி ஆய்வாளா் மனோகரன் வழக்கு பதிவு செய்தாா். மேலும், இறந்தவரின் உடலைக் கைப்பற்றி கூறாய்வுக்காக, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தொடர்புடையது

முதியவா் காா் மோதி உயிரிழப்பு

கல்குவாரி லாரி மோதியதில் விவசாயி உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து வெளிமாநில தொழிலாளி உயிரிழப்பு

சாலை விபத்தில் தலைமை செவிலியா் உயிரிழப்பு
வீடியோக்கள்

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

