எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

வாக்களிக்கச் செல்வோரிடம்... ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!

ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை என தமிழக அரசு எச்சரிக்கை...

News image

கோப்புப் படம் - ENS

Updated On :21 ஏப்ரல் 2026, 7:09 am

தமிழக தேர்தலையொட்டி வாக்களிக்க சொந்த ஊருக்குச் செல்வோரிடம் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்திற்கான சட்டப்பேரவைத் தேர்தல் வருகிற ஏப். 23 ஆம் தேதி நடைபெறுகிறது. இதையடுத்து வேலைக்காக வெளியூரில் இருப்பவர்கள் சொந்த ஊருக்குச் செல்ல வேண்டியுள்ளது. பண்டிகை காலம் போன்றே வாக்களிக்கச் செல்வோரிடம் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்தது.

இதையடுத்து ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் பயணிகள் புகார் அளிக்க தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் – 2026, 23.04.2026 அன்று வாக்குப்பதிவு நடைபெறுவதை முன்னிட்டு (21.04.2026 முதல்  26.04.2026 வரை) பொதுமக்கள் வெளியூர் பயணம் மேற்கொள்வதைப் பயன்படுத்தி தனியார் ஆம்னி பேருந்துகள் அதிகப்படியான கட்டணம் வசூல் செய்தால் அதனைத் தடுக்க தமிழ்நாடு முழுவதும் வட்டாரப்போக்குவரத்து அலுவலர்கள், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மற்றும் போக்குவரத்து சோதனைச்சாவடி ஆய்வாளர்கள் அடங்கிய சிறப்புக்குழு அமைக்கப்பட்டு, அவ்வாறு இயங்கும் ஆம்னி பேருந்துகளை தீவிரமாக சோதனை செய்து அனுமதி ரத்து போன்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் பொதுமக்கள் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக தெரியவந்தால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு கீழ்காணும் அலைப்பேசி எண்கள் மூலம்,  வாட்ஸ் ஆப் / குறுஞ்செய்தி / குரல் பதிவு மூலமாக புகார் தெரிவிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.

போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையரகம்,  சென்னை - 1800 425 6151  

இணைப்போக்குவரத்து ஆணையரகம்,  சென்னை (வடக்கு) - 99442 53404

இணைப்போக்குவரத்து ஆணையரகம்,  சென்னை  (தெற்கு) - 97905 50052

இணைப்போக்குவரத்து ஆணையரகம்,  மதுரை - 90953 66394

இணைப்போக்குவரத்து ஆணையரகம்,  கோயம்புத்தூர் - 91235 93971

துணைப்போக்குவரத்து ஆணையரகம், விழுப்புரம் - 96773 98825

துணைப்போக்குவரத்து ஆணையரகம், வேலூர் - 98400 23011

துணைப்போக்குவரத்து ஆணையரகம், சேலம் - 78456 36423

துணைப்போக்குவரத்து ஆணையரகம்,  ஈரோடு - 80569 40040

துணைப்போக்குவரத்து ஆணையரகம், திருச்சிராப்பள்ளி - 90660 32343

துணைப்போக்குவரத்து ஆணையரகம், விருதுநகர் - 90257 23800

துணைப்போக்குவரத்து ஆணையரகம்,  திருநெல்வேலி - 96981 18011

துணைப்போக்குவரத்து ஆணையரகம்,  தஞ்சாவூர் - 95850 20865

Story image

Summary

Election: Action to be taken against Omni buses for collecting excess fares

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.