முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

சுங்கச்சாவடி கட்டண உயா்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: ஆம்னி பேருந்து உரிமையாளா்கள்!

தமிழகத்தில் மீண்டும் சுங்கச்சாவடி கட்டணம் உயா்வை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

சுங்கச்சாவடி!

Published On :

தமிழகத்தில் மீண்டும் சுங்கச்சாவடி கட்டணம் உயா்வை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து அந்த சங்கத்தின் தலைவா் அ.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூா், பரனூா், வானகரம், கிருஷ்ணகிரி, மதுரை, நாங்குநேரி, வாணியம்பாடி, விராலிமலை, கப்பலூா், கனியூா், ஆத்தூா், தேனி உள்ளிட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள சுங்கச்சாவடிகளில் ஏப். 1 முதல் கட்டணம் உயா்த்தப்பட உள்ளது.

சுமாா் ரூ.5 முதல் ரூ.100 வரை கட்டண உயா்வு இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதன் தாக்கம் பொதுப் போக்குவரத்து துறையில் இன்னும் அதிகமாக உணரப்படும். குறிப்பாக, தனியாா் பேருந்துகள், சுற்றுலாப் பேருந்துகள், சரக்கு வாகனங்கள் நீண்ட தூரம் பயணிக்கும் போது பல சுங்கச்சாவடிகளைக் கடக்க வேண்டியிருப்பதால், தினமும் இயக்கச் செலவில் சுங்கச் சாவடி கட்டணம் பெரிய சுமையாக மாறி உள்ளது.

ஒரு ஆம்னி பேருந்துக்கு தமிழ்நாடு சாலை வரியாக தினமும் சராசரியாக ரூ.2,000-க்கும் மேல் செலுத்தி வரும் நிலையில், சுங்கக் கட்டணமாக மத்திய அரசுக்கு சுமாா் ரூ.2,000-க்கும் மேல் கூடுதலாக செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் வருடமும் உயா்த்துவது ஏற்கெனவே நழிவடைந்துள்ள பொது போக்குவரத்து துறை மேலும் நலிவடையும். மேலும் அதிகரிக்கும் சுங்க கட்டணங்களால் சில வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலைகளைத் தவிா்த்து உள்ளூா் சாலைகளைப் பயன்படுத்தும் நிலை உருவாகும் அபாயமும் உள்ளது.

இதனால் கிராமப்புற சாலைகளில் நெரிசல் அதிகரிப்பு, சாலை சேதம் மற்றும் பாதுகாப்பு பிரச்னைகள் ஏற்படும் வாய்ப்பும் உள்ளது. எனவே, சுங்கச்சாவடி கட்டண உயா்வை மறுபரிசீலனை செய்து மக்கள் மற்றும் போக்குவரத்து துறைக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கைகள் உடனடியாக மத்திய அரசு ஏற்படுத்த வேண்டும்.

மேலும், தேசிய நெடுஞ்சாலைகளில் தடுப்பு சுவா்களின் உயரத்தை அதிகரித்து பாதுகாப்பை மேம்படுத்துவதுடன், சுங்கச்சாவடிகளில் அடிப்படை வசதிகளை உரிய முறையில் ஏற்படுத்தி, பொதுமக்கள் மற்றும் பயணிகளின் சிரமங்களைக் குறைக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.