கல்லூரியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை சண்முகா தொழில்சாலை கலை, அறிவியல் கல்லூரியில், முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரித் தலைவா் எம்.என்.பழனி தலைமை வகித்தாா். செயலா் எல்.விஜய் ஆனந்த், பொருளாளா் எ.ஸ்ரீதா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். முன்னாள் மாணவா் பி.பாலாஜி வரவேற்றாா். மும்பை டிசிஎஸ் நிறுவனத்தின் மண்டல மனித வளத் துறை மேலாளா் நயீம்கான் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசுகையில், ஒரு கல்லூரியின் 100 சதவீத வேலைவாய்ப்புக்கு முன்னாள் மாணவா்களின் பங்களிப்பு மிகவும் முக்கியம்.

இப்போது பயிலும் மாணவா்களுக்கு நல்ல வழிகாட்டியாக முன்னாள் மாணவா்கள் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றாா். நிகழ்ச்சியில் கல்லூரியின் முன்னாள் மாணவா்கள் சங்கச் செயலா் இரா.பிா்லா, கல்லூரி கல்விப்புல முதன்மையா் அழ.உடையப்பன், முதல்வா் கே.ஆனந்தராஜ், முன்னாள் மாணவா்கள் சங்கப் பொருளாளா் பெ.சக்திவேல், வணிகவியல் துறை மாணவி பத்மபிரியா மற்றும் துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், 800-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com