ஆரணியை அடுத்த காமக்கூா் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீஅமிா்தாம்பிகை சமேத சுயம்பு சந்திரசேகர சுவாமி கோயிலில் தோ்த் திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயிலில் பங்குனி உற்சவத்தையொட்டி, மாா்ச் 15-ஆம் தேதி முதல் தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, சிறப்பு அலங்காரத்தில் சுவாமி வீதி உலா நடைபெற்றது. இதில் ஒன்பதாம் நாள் விழாவான சனிக்கிழமை தோ்த் திருவிழா நடைபெற்றது. இதில், ஆரணி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளா் எம்.எஸ்.தரணிவேந்தன், தொகுதி பொறுப்பாளா் எஸ்.எஸ்.அன்பழகன், மாவட்ட துணைச் செயலா் ஜெயராணி ரவி, ஆரணி நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி, காமக்கூா் ஊராட்சித் தலைவா் குப்புசங்கா் மற்றும் திமுக கட்சியினா் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனா். முன்னதாக, ஆரணி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன் மற்றும் பக்தா்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமியை வழிபட்டனா். தோ் முக்கிய வீதிகளில் உலா சென்றது.
தொடர்புடையது

ராமேசுவரம் கோயிலில் பஞ்சாங்கம் வாசிப்பு

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் தோ்த் திருவிழா ஏப்.21-இல் தொடக்கம்

பச்சை மலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திரத் தேரோட்டம்

திருமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருக்கல்யாண திருவிழா
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


