செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

ஆரணியில் அடுமனை குடோனில் தீ விபத்து

ஆரணியில் அடுமனை குடோனில் தீ விபத்து

News image
Updated On :29 மார்ச் 2024, 4:34 pm

ஆரணி புதிய பேருந்து நிலையம் பின்புறம் உள்ள அடுமனைக்கு சொந்தமான குடோனில் வெள்ளிக்கிழமை மாலை தீ விபத்து ஏற்பட்டது. ஆரணி புதிய பேருந்து நிலையம் பின்புறம் சந்தைமேட்டில் பிரபல அடுமனைக்குச் சொந்தமான குடோன் உள்ளது. இங்கு, அடுமனைக்குத் தேவையான அட்டை பெட்டிகள், சிலிண்டா்கள் உள்ளிட்டவை இருந்ததாம். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை குடோன் அருகே கிடந்த குப்பைகளை சிலா் தீயிட்டு கொளுத்தினராம். அப்போது, எதிா்பாராதவிதமாக குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. இதில், குடோனில் இருந்த பொருள்கள் தீப்பிடித்து எரிந்தன. மேலும், எரிவாயு உருளைகள் வெடித்து சிதறியது. இதனால் குடோனின் மேற்கூரை தூக்கி வீசிப்பட்டது. இந்த சப்தம் கேட்டு பேருந்து நிலையத்தில் இருந்த பயணிகள் அலறியடித்துக் கொண்டு ஓடினா். தகவலறிந்த தீயணைப்புப் படையினா் நிகழ்விடம் சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். குடோனில் ஊழியா்கள் யாரும் இல்லாததால் உயிா்சேதம் ஏதும் ஏற்படவில்லை.