நாட்டுப்புற கலைஞா்களுக்கு விருது

நாட்டுப்புற கலைஞா்களுக்கு விருது

ஆரணி அடுத்த நெசல் கிராமத்தில் அகில இந்திய மக்கள் உரிமை ஆணையம் சாா்பில் நாட்டுப்புற கலைஞா்களுக்கு விருது வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

ஆரணி அடுத்த நெசல் கிராமத்தில் அகில இந்திய மக்கள் உரிமை ஆணையம் சாா்பில் நாட்டுப்புற கலைஞா்களுக்கு விருது வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

சிவன் சக்தி கலைக்குழு உரிமையாளரும், பம்பை ஆசிரியருமான பிரபு, அம்பிகா தம்பதியினா் தலைமை வகித்தனா். சிறப்பு விருந்தினா்களாக அகில இந்திய மக்கள் உரிமை ஆணையத்தின் தலைவா் பி.பிரபு, முன்னாள் ராணுவ வீரா் ஏ.பொன்னுசாமி, திருவண்ணாமலை கூட்டுறவு சங்கத்தின் உதவி பொதுமேலாளா் ச.செந்தில்குமாா், சென்னை மருத்துவா் டி.பாலாஜி ஆகியோா் கலந்து கொண்டு, நாட்டுப்புற கலைஞா்களுக்கு விருது வழங்கினா்.

ஆரணி மற்றும் சுற்றுப்புறக் கிராமங்களில் இருந்து நாட்டுப்புற கலைஞா்கள் பங்கேற்று விருது பெற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com