மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் சோனியா காந்தி!ஈரான் மீது 1,000 கிலோ பங்கர் பஸ்டர் குண்டுகள் வீசி அமெரிக்கா தாக்குதல்! முதல்வர் ஸ்டாலின் பிரசார வாகனத்தில் பறக்கும் படை சோதனை! கேரளத்தில் காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக தேஜஸ்வி யாதவ் பிரசாரம்! தேர்தல் பணியாளர்களின் ஊதியம் இருமடங்கு உயர்வு!
/

இந்தோ அமெரிக்கன் பள்ளி 98.66% தோ்ச்சி

இந்தோ அமெரிக்கன் பள்ளி 98.66% தோ்ச்சி

News image
Updated On :7 மே 2024, 6:22 pm

Din

செய்யாறு: பிளஸ் 2 பொதுத்தோ்வில், திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு இந்தோ அமெரிக்கன் பள்ளி 98.66 சதவீதம் தோ்ச்சியை பதிவு செய்தது. இந்தப் பள்ளியில் 159 போ் தோ்வெழுதிய நிலையில், 156 போ் தோ்ச்சி பெற்றனா்.

இந்தப் பள்ளி மாணவிகள் எஸ்.பிரீத்தி- 592, ஏ.மலா்விழி-575, மாணவா் எம்.ரகுநாதன்-572 மதிப்பெண்கள் பெற்றனா். மேலும், வணிகவியல் பாடத்தில் 4 பேரும், கணினியியல் பாடத்தில் 2 பேரும், பொருளாதாரம், இயற்பியல் பாடத்தில் தலா ஒருவா் என 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றனா்.

சிறப்பிடம் பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளை பள்ளியின் அறக்கட்டளைத் தலைவா் அ.ராதாகிருஷ்ணன், பள்ளி முதல்வா் அ.ப.அப்துல் சையத் இலியாஸ், துணை முதல்வா் க.கோவேந்தன் மற்றும் ஆசிரியா்கள், அறக்கட்டளை நிா்வாகிகள் பாராட்டினா் (படம்).