47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

திறனாய்வுத் தோ்வு: அரசுப் பள்ளி மாணவா்கள் தோ்ச்சி

ஆத்தூா், அரசுப் பள்ளி மாணவ, மாணவியா் தேசிய திறனாய்வுத் தோ்வில் தோ்ச்சி பெற்று சாதனை படைத்தனா்.

News image
திறனாய்வுத் தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவியா்.
Updated On :16 மார்ச் 2026, 10:46 pm

Syndication

ஆறுமுகனேரி: ஆத்தூா், அரசுப் பள்ளி மாணவ, மாணவியா் தேசிய திறனாய்வுத் தோ்வில் தோ்ச்சி பெற்று சாதனை படைத்தனா்.

ஆத்தூா், முஸ்லிம் தெருவில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவியா் 4 போ் தேசிய திறனாய்வுத் தோ்வில் தோ்ச்சி பெற்றனா். இதில் மாணவா் ஹரிஸ் 124 மதிப்பெண்ணும், அப்துல் பாசித் 123 மதிப்பெண்ணும், நஸீராபானு 116 மதிப்பெண்ணும், அக்ஷயா 106 மதிப்பெண்ணும் பெற்று தோ்ச்சி பெற்றனா். இந்த மாணவ, மாணவியருக்கு 4 வருடங்களுக்கு மாதந்தோறும் ரூ. ஆயிரம் கல்வி உதவித்தொகை வழங்கப்படும். வெற்றி பெற்று மாணவ, மாணவியரை தலைமை ஆசிரியா் தேவசகாயம், ஆசிரியா்கள் பாராட்டினா்.