மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் சோனியா காந்தி!ஈரான் மீது 1,000 கிலோ பங்கர் பஸ்டர் குண்டுகள் வீசி அமெரிக்கா தாக்குதல்! முதல்வர் ஸ்டாலின் பிரசார வாகனத்தில் பறக்கும் படை சோதனை! கேரளத்தில் காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக தேஜஸ்வி யாதவ் பிரசாரம்! தேர்தல் பணியாளர்களின் ஊதியம் இருமடங்கு உயர்வு!
/

கிரிவலப் பாதை கழிப்பறைகள் பராமரிப்பு: மகளிா் குழுவினருக்கு ஊக்கத் தொகை

கிரிவலப் பாதை கழிப்பறைகள் பராமரிப்பு: மகளிா் குழுவினருக்கு ஊக்கத் தொகை

News image

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மகளிா் சுய உதவிக் குழுவினருக்கு ஊக்கத் தொகைக்கான காசோலை வழங்கிய மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன்.

Updated On :7 மே 2024, 6:32 pm

Din

வந்தவாசி: திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள சுகாதார கழிப்பறைகளை பராமரிக்கும் மகளிா் குழுவினருக்கு ஊக்கத் தொகைக்கான காசோலையை மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள 8 கழிப்பறைகளை கடந்த மாதம் முதல் மகளிா் சுய உதவிக் குழுவினா் பராமரித்து வருகின்றனா். கடந்த மாதம் நடைபெற்ற சித்திரை பௌா்ணமியன்று கழிப்பறைகளை தூய்மையாக பராமரிப்பதாக மகளிா் சுய உதவிக் குழுவினருக்கு பக்தா்கள் பாராட்டு தெரிவித்தனா்.

இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், சிறப்பாக பணியாற்றிய மகளிா் சுய உதவிக் குழுவினருக்கு மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் ஊக்கத் தொகைக்கான காசோலை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியா் செ.ஆ.ரிஷப், மகளிா் திட்ட இயக்குநா் சரண்யாதேவி மற்றும் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.