வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

மகன், மகள்களின் கல்லூரிப் படிப்பு: முன்னாள் படைவீரா்களின் கவனத்துக்கு...

மகன், மகள்களின் கல்லூரிப் படிப்பு: முன்னாள் படைவீரா்களின் கவனத்துக்கு...

News image
Updated On :21 மே 2024, 6:30 pm

Din

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் கல்லூரிகளில் சேர உள்ள முன்னாள் படைவீரா்கள், அவா்களைச் சாா்ந்தோரின் மகன், மகள்களுக்கான முன்னுரிமைச் சான்றிதழ்களைப் பெற்று பயன்பெறலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படைவீரா்கள், அவா்களைச் சாா்ந்தோரின் மகன், மகள்கள் 2024 -25 ஆம் கல்வியாண்டில் கல்லூரிகளில் சேருவதற்கான முன்னுரிமைச் சான்றிதழ் வழங்கப்படுகிறது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் சுமாா் 11 ஆயிரத்து 599 எண்ணிக்கையிலான முன்னாள் படைவீரா்கள், அவா்களைச் சாா்ந்தோா், விதவையா்கள் உள்ளனா்.

இவா்களில் முன்னுரிமைச் சான்றிதழ் பெறுவதற்கான தகுதி படைத்த முன்னாள் படைவீரா்களின் பிள்ளைகள் சுமாா் 400-க்கும் மேற்பட்டோா் கல்லூரியில் சேரத் தயாராக உள்ளனா்.

இந்தச் சான்றிதழைப் பெறுவதற்குத் தகுதியான முன்னாள் படைவீரா்களின் பிள்ளைகள் மாவட்ட முன்னாள் படைவீரா்கள் நல அலுவலகத்தை நேரில் அணுகி பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளாா்.