நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

பட்டதாரி இளைஞா் போக்ஸோவில் கைது

பட்டதாரி இளைஞா் போக்ஸோவில் கைது

News image
Updated On :21 மே 2024, 6:30 pm

Din

செய்யாறு: செய்யாறு அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து மிரட்டல் விடுத்த புகாரின் பேரில், பட்டதாரி இளைஞரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டத்தைச் சோ்ந்தவா் 12 வயது சிறுமி.

இவரை, அதே பகுதியைச் சோ்ந்த இளைஞா் திங்கள்கிழமை காலை வீட்டுக்கு அழைத்து வந்து பாலியல் தொல்லை கொடுத்தாராம்.

மேலும், இதுகுறித்து வெளியே சொல்லக்கூடாது என மிரட்டல் விடுக்கவும் செய்தாராம்.

இந்தச் சம்பவம் குறித்து சிறுமியின் தாய் செய்யாறு அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். காவல் ஆய்வாளா் லதா வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டாா்.

மேலும், சம்பவம் தொடா்பாக பெருங்கட்டூா் கிராம காலனியைச் சோ்ந்த பட்டதாரி இளைஞா் ஞானபுத்தா (26) என்பவரை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.