செய்யாறு அரசு கலைக் கல்லூரியில் நாளை மாணவா் சோ்க்கை கலந்தாய்வு
செய்யாறு அரசு கலைக் கல்லூரியில் நாளை மாணவா் சோ்க்கை கலந்தாய்வு


செய்யாறு: செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் நிகழ் கல்வியாண்டு மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு மே 30-ஆம் தேதி தொடங்குகிறது.
இதுகுறித்து கல்லூரி முதல்வா் ந.கலைவாணி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
இளநிலை மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு மே 30-ஆம் தேதி சிறப்பு பிரிவு மாணவா் சோ்க்கையுடன் தொடங்குகிறது.
மாணவா் சோ்க்கைக்கான முதல் கலந்தாய்வுடன் வருகிற ஜூன் 10 முதல் 15 -ஆம் தேதி வரையும், இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஜூன் 24-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரையும் நடைபெறுகிறது.
ஜூன் 10-ஆம் தேதி 400 - 333 மதிப்பெண்களுக்கு அனைத்து அறிவியல் பாடப் பிரிவுகளுக்கும், ஜூன் 11-ஆம் தேதி 332- 314 மதிப்பெண்களுக்கும்,
ஜூன் 12-ஆம் தேதி 313-300 மதிப்பெண்களுக்கும், அனைத்து வணிகவியல் பாடப்பிரிவுகள் பி.காம்., பி.பி.ஏ. ஆகிய பாடப் பிரிவுகளுக்கும், ஜூன் 13-இல் 299 - 291 மதிப்பெண்களுக்கும், அனைத்து கலை பி.ஏ. பாடப் பிரிவுகளுக்கு ஜூன் 14-லிலும் கலந்தாய்வு நடைபெறுகிறது.
பி.ஏ.தமிழ், பி.ஏ.ஆங்கிலம், சிறப்புத் தமிழ் மற்றும் பகுதி1, தமிழ் (100 - 61), சிறப்பு ஆங்கிலம் மற்றும் பகுதி 2 ஆங்கிலம் (100 - 61), பிஏ, பிகாம், பிபிஏ ஆகிய பாடப் பிரிவுகளுக்கு ரூ.2,241-ம், பிஎஸ்சி (இயற்பியல் வேதியியல், தாவரவியல், விலங்கியல், கணிதம்) ரூ.2261-ம் கணினி அறிவியல் மற்றும் பிசிஏ ரூ.1361- ம் கல்விக் கட்டணமாக செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...