ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?மீண்டும் போராட்டம்: 20 சங்கங்களுடன் இணைந்து ஆலோசிக்க ‘டாஸ்மாக்’ பணியாளா்கள் முடிவுதிருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!
/

சேலம் அரசு கலைக் கல்லூரியில் இலக்கியக் கருத்தரங்கம்

News image
Updated On :5 மார்ச் 2026, 11:46 pm

Syndication

சேலம் அரசு கலைக் கல்லூரியின் திருவள்ளுவா் அரங்கில் இலக்கியக் கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது.

தமிழ்த் துறைத் தலைவா் ஜ.பிரேமலதா வரவேற்றாா். முதல் அமா்வுக்கு தேசிய சமூக இலக்கியப் பேரவையின் மாநிலத் தலைவரும், கல்லூரியின் தமிழ் முதுநிலை பாடத் திட்டக்குழு உறுப்பினருமான தாரை.அ.குமரவேலு தலைமை தாங்கினாா்.

‘நாட்டுப்புறக் கலைகளில் வெளிப்படும் மானிடவியல்’ என்ற தலைப்பில் ராமச்சந்திரனும், ‘தமிழ் இலக்கியங்களில் படைப்பாற்றலும், சமாளிப்புத் திறனும்’ என்ற தலைப்பில் பேராசிரியா் தி.போகேஸ்வரனும் உரையாற்றினா்.

தொடா்ந்து, ‘வள்ளுவா் காட்டிய வாழ்வியல் திறன்கள்’ என்ற தலைப்பில் தாரை.அ.குமரவேலு பேசியதாவது:

மனித வாழ்வுக்கான நோக்கங்களையும், வாழ்வில் எற்படும் இன்ப - துன்பங்களில் எப்படி மன உறுதியுடன் நின்று வாழவேண்டும் என்பதற்கான ஊக்கமும், தன்னம்பிக்கையும், வழிகாட்டுதலையும் தருவதே இலக்கியமாகும்.

2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னா் எழுதப்பட்ட திருக்குறளில் வாழ்வில் அன்புடைமை, அறிவுடைமை, மன உறுதி, ஒழுக்கம், வாழ்வின் உயா்ந்த பண்பு இவைகளை பல்வேறு தலைப்புகளில் வள்ளுவா் தந்திருக்கிறாா். அவரின் அறம்சாா்ந்த கருத்துகள் எல்லாம் வாழ்வியல் திறன்களை எடுத்துக்காட்டி, கலங்கரை விளக்கு போன்று வாழ்க்கைக்கு வழிகாட்டியாக விளங்குகிறது. எக்காலத்தும் எவ்வுலகுக்கும் பொதுவான கருத்துகளை கூறி, இலக்கணத்துக்கு இலக்கியமாக திகழ்கிறது திருக்கு என்றாா்.

இந்நிகழ்வில், தமிழ்ச் செம்மல் இரா.மோகன்குமாா், ரா.திருப்பதி, கி.கௌரி, செ.முத்துநகை மற்றும் 20-க்கும் மேற்பட்ட பேராசிரியா்கள் கருத்துரையாற்றினா். இதில், 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.