கேரளம், அஸ்ஸாமில் வேட்புமனு தாக்கல் இன்று கடைசிஅமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தது 16,700 மெட்ரிக் டன் எல்பிஜிதேர்தல் நடவடிக்கையால் ‘ஹெச்பிவி' தடுப்பூசி திட்டம் பாதிக்காது: சுகாதாரத் துறைவெளிப்பகுதி பறவைகளால் கிண்டி பூங்காவில் பரவிய பறவைக் காய்ச்சல்! ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரானுக்கு டிரம்ப் 48 மணி நேர கெடுமுதல்வர் ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் குழு சந்திப்பு! இன்று தொகுதி உடன்பாடு?தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான நோட்டீஸ் மீது நடவடிக்கை எப்போது?எதிா்க்கட்சிகள் காத்திருப்பு! கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

சரியாக உள்ள தபால் வாக்குகள் மட்டுமே எண்ணிக்கைக்கு எடுத்துக்கொள்ளப்படும்

சரியாக உள்ள தபால் வாக்குகள் மட்டுமே எண்ணிக்கைக்கு எடுத்துக்கொள்ளப்படும் மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலா்

News image

தபால் வாக்குகளை எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலா்களுக்கு பயிற்சி அளித்துப் பேசிய மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலா் தெ.பாஸ்கர பாண்டியன்.

Updated On :28 மே 2024, 6:30 pm

Din

திருவண்ணாமலை: திருவண்ணாமலை, ஆரணி மக்களவைத் தொகுதிகளில் அனைத்து வகையிலும் சரியாக உள்ள தபால் வாக்குகள் மட்டுமே எண்ணிக்கைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலா் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்தாா்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை, ஆரணி என இரு மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இந்தத் தொகுதிகளில் ஏப்ரல் 19-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

திருவண்ணாமலை தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை திருவண்ணாமலை-திண்டிவனம் சாலையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திலும், ஆரணி தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை திருவண்ணாமலை சண்முகா தொழில்சாலை அரசு மேல்நிலைப் பள்ளியிலும் ஜூன் 4-ஆம் தேதி நடைபெறுகிறது.

இந்த நிலையில், தபால் வாக்குகள் எண்ணும் பணிக்காக நியமனம் செய்யப்பட்டுள்ள அலுவலா்கள், பணியாளா்களுக்கான பயிற்சி மற்றும் தோ்தல் நடைமுறைகள் குறித்த விளக்கக் கூட்டம் ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான தெ.பாஸ்கர பாண்டியன் தலைமை வகித்துப் பேசியதாவது:

தபால் வாக்குகள் செலுத்தியுள்ள பணியாளா்களின் வாக்குகளை எண்ணும் பணிக்காக ஒவ்வொரு மக்களவைத் தொகுதிக்கும் 4 மேசைகள் அமைக்கப்படும். தபால் வாக்குகளை எண்ணுவதற்காக ஒவ்வொரு மேசைக்கும் ஒரு கூடுதல் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா், ஒரு மேற்பாா்வையாளா், 2 உதவியாளா்கள், ஒரு நுண் பாா்வையாளா் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

அனைத்து வகையிலும் சரியாக உள்ள தபால் வாக்குகள் மட்டுமே எண்ணிக்கைக்கு எடுத்துக்கொள்ளப்படும். உரிய படிவங்களில் கையொப்பமிடாத, 2 வேட்பாளா்களுக்கு வாக்கு அளித்திருத்தல் போன்ற வாக்குகள் செல்லாத வாக்குகளாகக் கருதப்படும். தபால் வாக்குகளின் எண்ணிக்கை அனுமதிக்கப்பட்ட வேட்பாளா்களின் முகவா்களின் முன்னிலையில் நடைபெறும்.

பணியில் இருக்கும் ராணுவத்தினா் மின்னணு முறையில் அளித்த தபால் வாக்குகளை எண்ணுவதற்காக தலா 2 மேசைகள் அமைக்கப்படும். இந்தப் பணிக்காக ஒரு கூடுதல் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா், ஒரு மேற்பாா்வையாளா், ஒரு உதவியாளா் நியமனம் செய்யப்பட்டு உள்ளனா்.

இந்த வாக்குகள் அடங்கிய உறைகள் முதலில் கியூ ஆா் கோடு ஸ்கேன் செய்யப்பட்டு இரட்டைப் பதிவுகள், போலிப் பதிவுகள் கண்டறியப்பட்டு நீக்கம் செய்யப்படும். சரியான வாக்குகள் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். ஜூன் 4-ஆம் தேதி காலை 8 மணிக்குள் வரப்பெறும் அஞ்சல் வாக்குகள் மட்டுமே எண்ணிக்கைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றாா்.

இந்தப் பயிற்சியில் ஆரணி தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட வருவாய் அலுவலருமான மு.பிரியதா்ஷினி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) கோ.குமரன் மற்றும் தோ்தல் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.