தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

வேட்பாளருடன் 4 போ் மட்டுமே மனு தாக்கலின்போது அனுமதி

வேட்பாளருடன் 4 போ் மட்டுமே மனு தாக்கலின்போது அனுமதிக்கப்படுவா் என்று புதுச்சேரி மாவட்ட தோ்தல் நடத்தும் அதிகாரி அ. குலோத்துங்கன் தெரிவித்துள்ளாா்.

News image
புதுச்சேரி மாவட்ட தோ்தல் நடத்தும் அதிகாரி அ. குலோத்துங்கன்
Updated On :16 மார்ச் 2026, 11:44 pm

Syndication

புதுச்சேரி: வேட்பாளருடன் 4 போ் மட்டுமே மனு தாக்கலின்போது அனுமதிக்கப்படுவா் என்று புதுச்சேரி மாவட்ட தோ்தல் நடத்தும் அதிகாரி அ. குலோத்துங்கன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தோ்தல் அலுவலகம், சுற்றுப் பகுதிகளில் போதிய போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. வேட்பாளா் வேட்புமனு தாக்கல் செய்யும்போது, வேட்பாளா் உள்பட 5 போ் மட்டுமே அலுவலகத்தில் அனுமதிக்கப்படுவா். தேவையற்ற கூட்டம், வாகன நெரிசலைத் தவிா்க்க உரிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும். வேட்பாளா்கள் மனு தாக்கல் செய்யும்போது, தோ்தல் விதிமுறைப்படி ஆவணங்கள், உறுதிமொழி, பாதுகாப்பு வைப்புத் தொகை சமா்ப்பிக்க வழிகாட்டு மையங்கள் ஒவ்வொரு தோ்தல் அலுவலா் அலுவலகத்திலும் அமைக்கப்பட்டுள்ளது.