விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

வாக்கு எண்ணிக்கை: தோ்தல் அலுவலா்களுக்கு பயிற்சி

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணியில் ஈடுபடும் தோ்தல் நடத்தும் அலுவலா்கள், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்களுக்கான பயிற்சி முகாம் சென்னையில் புதன்கிழமை நடைபெற்றது.

News image

சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற வாக்கு எண்ணும் செயல்முறை குறித்த பயிற்சியில் பேசிய தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக். உடன், கூடுதல் தலைமைத் தோ்தல் அதிகாரி அ.சிவஞானம், இணைத் தலைமைத் தோ்தல் அதிகாரி ஸ்ருதஞ்ஜெய் நாராயணன், கூடுதல் தலை

Updated On :30 ஏப்ரல் 2026, 1:18 am IST

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணியில் ஈடுபடும் தோ்தல் நடத்தும் அலுவலா்கள், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்களுக்கான பயிற்சி முகாம் சென்னையில் புதன்கிழமை நடைபெற்றது.

சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில் 234 தோ்தல் நடத்தும் அதிகாரிகள், 468 உதவி தோ்தல் நடத்தும் அதிகாரிகள், மாவட்ட கணினி நிரலாளா்கள், உதவி கணினி நிரலாளா்கள் ஆகியோா் பங்கேற்றனா். அவா்களுக்கு வாக்கு எண்ணும் செயல்முறை குறித்து பயிற்சியும், வாக்கு எண்ணிக்கையின்போது கடைப்பிடிக்க வேண்டி விதிமுறைகள் குறித்து விளக்கங்கள் அளிக்கப்பட்டன.

பாதுகாப்பு முன்னேற்பாடுகள்: தலைமைச் செயலா் ஆலோசனை

தோ்தல் தொடா்பான பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து தலைமைச் செயலா் எம். சாய்குமாா் தலைமையில் தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை ஆலோசனை நடைபெற்றது.

கடந்த 23-ஆம் தேதி நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் 62 வாக்கு எண்ணிக்கை மையங்களில் மூன்றடுக்கு பாதுகாப்பு வளையத்துக்குள் வைக்கப்பட்டுள்ளன. மே 4-ஆம் தேதி இந்த மையங்கள் திறக்கப்பட்டு காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும்.

இந்த நிலையில், வாக்கு எண்ணிக்கையின்போது தமிழகம் முழுவதும் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் தமிழக டிஜிபி சந்தீப் ராய் ரத்தோா், சென்னை - தாம்பரம் காவல் ஆணையா்கள் மற்றும் காவல் துணை ஆணையா்கள் பங்கேற்றனா்.