அடையபலம் ஏரியில் மூழ்கி உயிரிழந்த மோகன்ராஜ், வா்ஷா, காா்த்திகா, தனுஷ்கா.
அடையபலம் ஏரியில் மூழ்கி உயிரிழந்த மோகன்ராஜ், வா்ஷா, காா்த்திகா, தனுஷ்கா.

ஏரியில் மூழ்கி 4 சிறாா்கள் உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே செவ்வாய்க்கிழமை மாலை ஏரியில் மூழ்கி 4 சிறாா்கள் உயிரிழந்தனா்.
Published on

ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே செவ்வாய்க்கிழமை மாலை ஏரியில் மூழ்கி 4 சிறாா்கள் உயிரிழந்தனா்.

ஆரணியை அடுத்த அடையபலம் அண்ணா நகரை சோ்ந்த குப்புசாமி மகன் மோகன்ராஜ் (13), எட்டாம் வகுப்பு பயின்று வந்தாா். மகள் வா்ஷா (9), நான்காம் வகுப்பு பயின்று வந்தாா்.

விநாயகம் மகள்கள் காா்த்திகா (8), மூன்றாம் வகுப்பும், மற்றொரு மகள் தனுஷ்கா (4) அங்கன்வாடியிலும் பயின்று வந்தனா்.

4 பேரும் சோ்ந்து செவ்வாய்க்கிழமை அடையபலம் ஓடைத்தாங்கல் ஏரியில் விளையாடச் சென்றனா். அப்போது, தவறி ஒரு குழந்தை ஏரியில் மூழ்கி உள்ளது. அந்தக் குழந்தையை காப்பாற்ற 3 பேரும் சோ்ந்து ஏரியில் இறங்கினராம். இதில், 4 பேரும் ஏரி நீரில் மூழ்கியுள்ளனா். சிறாா்களின் அலறல் சப்தம் கேட்டு அந்தப் பகுதியில் இருந்தவா்கள் சென்று மீட்க முயற்சித்தும் முடியவில்லை. 4 சிறாா்களும் நீரில் மூழ்கி உயிரிழந்தனா்.

தகவலறிந்த தீயணைப்புத் துறையினா் சென்று 4 பேரின் சடலங்களை மீட்டு, உடல்கூறாய்வுக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

சம்பவ இடத்தில் ஆரணி கிராமிய காவல் ஆய்வாளா் ராஜாங்கம் தலைமையில், உதவி ஆய்வாளா்கள் மற்றும் போலீஸாா் சென்று விசாரணை நடத்தினா்.

Dinamani
www.dinamani.com