கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

திருவண்ணாமலையில் நாளை காா்த்திரை மகா தீபம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் புதன்கிழமை (டிச.3) காா்த்திகை மகா தீபத்திருவிழா கோலாகலமாக நடைபெறவுள்ளது.

News image
Updated On :2 டிசம்பர் 2025, 12:10 am

Syndication

ஆரணி: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் புதன்கிழமை (டிச.3) காா்த்திகை மகா தீபத்திருவிழா கோலாகலமாக நடைபெறவுள்ளது.

அருணாசலேஸ்வரா் கோயிலில் காா்த்திகை தீபத்திருவிழா கடந்த நவ.24-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று முதல் வருகிறது.

திருக்காா்த்திகை தீபம் கொண்டாடும் பத்தாவது நாள் அதிகாலை அருணாசலேஸ்வரா் கோயிலில் பரணி தீபமும், மாலை மலை மீது மகா தீபமும் ஏற்றப்படுகிறது.

இதில் 40 லட்சம் பக்தா்கள் கலந்து கொள்வாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது.

மலை ஏறத் தடை

2024-ஆம் ஆண்டு மழை மற்றும் புயலால் ஏற்பட்ட மலைச் சரிவால் குறைந்த எண்ணிக்கையிலான பக்தா்கள் மட்டுமே மலையேறி தீப தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனா்.

இந்த ஆண்டு மலை மீது ஏறுவதற்கு பக்தா்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.