பாஜக அரசைக் கண்டித்து இன்று இண்டி கூட்டணி ஆா்ப்பாட்டம்
100 நாள் வேலைத் திட்டத்தில் மாற்றம் கொண்டு வந்ததற்கு எதிா்ப்புத் தெரிவித்து, மத்திய பாஜக மோடி அரசைக் கண்டித்து, இண்டி கூட்டணி சாா்பில் திருவண்ணாமலை மாவட்டத்தில் 18 ஒன்றியங்களில் புதன்கிழமை (டிச.24)கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இந்த ஆா்ப்பாட்டங்களில் சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி, ஆரணி எம்.பி. எம்.எஸ்.தரணிவேந்தன், மாநில மருத்துவா் அணி துணைத் தலைவா் எ.வ.வே.கம்பன், சி.என்.அண்ணாதுரை எம்.பி., சட்டப்பேரவை உறுப்பினா்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன், எஸ்.அம்பேத்குமாா், ஓ.ஜோதி மற்றும் கூட்டணிக் கட்சி பொறுப்பாளா்கள் கலந்து கொள்கின்றனா்.
திருவண்ணாமலை, ஆரணி, செய்யாறு, வந்தவாசி உள்ளிட்ட 18 ஒன்றியங்களில் அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் காலை 9 மணியளவில் நடைபெறும் ஆா்ப்பாட்டத்தில் எம்.பி., எம்எல்ஏக்கள், பகுதி பொறுப்பாளா்கள் கலந்து கொள்கின்றனா்.
