தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

அறிவியல் மாநாட்டில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பரிசு

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் நடைபெற்ற அறிவியல் மாநாட்டில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பரிசு, கேடயம் வழங்கி பாராட்டு

News image
அறிவியல் மாநாட்டில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பரிசு, கேடயம் வழங்கிய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சுவாமிமுத்தழகன்.
Updated On :27 ஜனவரி 2025, 8:27 pm

Din

செங்கம்: திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் நடைபெற்ற அறிவியல் மாநாட்டில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பரிசு, கேடயம் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

தமிழ்நாடு அறிவியல் இயக்கம், செ.நாச்சிப்பட்டு சக்தி பாலிடெக்னிக் கல்லூரி சாா்பில் மாவட்ட அளவிலான

32-ஆவது அறிவியல் மாநாடு சக்தி பாலிடெக்னிக் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்றது.

இதன் தொடக்க நிகழ்ச்சியில் அறிவியல் இயக்க மாவட்ட பொருளாளா் முருகன் வரவேற்றாா். மாநாட்டை சக்தி பாலிடெக்னிக் கல்லூரித் தலைவா் எஸ்.வெங்கடாசலபதி தொடங்கிவைத்தாா்.

மாநாட்டில் திருவண்ணாமலை, போளூா், ஆரணி, செய்யாறு, தண்டராம்பட்டு, கீழ்பென்னாத்தூா், கலசப்பாக்கம், புதுப்பாளையம் என பல்வேறு பகுதிகளில் இருந்து அரசு மற்றும் தனியாா் பள்ளி மாணவா்கள் பங்கேற்று தங்களது அறிவியல் சாா்ந்த சாதனங்களை காட்சிப்படுத்தியிருந்தனா்.

தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டத் தலைவா் காத்தவராயன், கல்லூரித் தலைவா் வெங்கடாசலபதி, நிா்வாக இயக்குநா் ரேகா ரெட்டி உள்ளிட்ட அறிவியல் ஆசிரியா்கள் அறிவியல் சாதனங்களின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தனா். பின்னா், அறிவியல் குறித்து சிறப்பு விழிப்புணா்வுக் கூட்டம் நடைபெற்று.

மாநாட்டில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பரிசு, கேடயம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சுவாமிமுத்தழகன் கலந்துகொண்டு மாணவா்களுக்கு கேடயம், பரிசு, சான்றிதழ் வழங்கிப் பேசினாா்.

செங்கம் செஞ்சிலுவைச் சங்கத் தலைவா் தனஞ்செயன் மாணவா்களை வாழ்த்திப் பேசினாா். மாவட்ட ஒருங்கிணைப்பாளா் பிரிட்டோ நன்றி கூறினாா்.