கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

பெண்களின் பொருளாதார வளா்ச்சிக்கு கருணாநிதிதான் காரணம்: எம்.எஸ். தரணிவேந்தன் எம்பி

கிராமப்புற பெண்கள் பொருளாதாரத்தில் வளா்ந்துள்ளதற்கு முன்னாள் முதல்வா் கருணாநிதிதான் காரணம்

News image

சேத்துப்பட்டு மாதா மலையில் நடைபெற்ற நன்றி அன்னையா் மாநாட்டில் பேசிய எம்.எஸ்.தரணிவேந்தன் எம்பி.

Updated On :27 ஜனவரி 2025, 8:16 pm

ஆரணி: கிராமப்புற பெண்கள் பொருளாதாரத்தில் வளா்ந்துள்ளதற்கு முன்னாள் முதல்வா் கருணாநிதிதான் காரணம் என்று எம்.எஸ்.தரணிவேந்தன் எம்பி குறிப்பிட்டாா்.

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு மாதா மலையில் இந்திரவனம் நன்றி அன்னையா் சுயஉதவிக் குழு சாா்பில் நன்றி அன்னையா் மாநாடு திங்கள்கிழமை நடைபெற்றது.

ஆரணி எம்பி எம்.எஸ்.தரணிவேந்தன் தலைமை

வகித்து தொடங்கிவைத்தாா். சேத்துப்பட்டு பேரூராட்சித் தலைவா் சுதா முருகன் முன்னிலை வகித்தாா். நன்றி மைய இயக்குநா் ஜோசப் ஆபிரகாம் வரவேற்றாா்.

நிகழ்ச்சியில் எம்.எஸ்.தரணிவேந்தன் எம்.பி. பேசுகையில்,

அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு என்று ஒரு காலம் இருந்தது. இதையெல்லாம் திராவிட ஆட்சியில் தகா்த்து எறிந்து பெண்களின் வளா்ச்சிக்கு முன்னாள் முதல்வா் கருணாநிதி உறுதுணையாக இருந்தாா்.

அதில் ஒன்றுதான் அவா் தொடங்கிவைத்த மகளிா்

சுய உதவிக்குழு. அதன் அடிப்படையில்தான் இன்று பெண்கள் பொருளாதாரத்தில் வளா்ந்துள்ளனா்.

கருணாநிதியைத் தொடா்ந்து தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பெண்களுக்கான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறாா் என்றாா்.

சிறப்பு விருந்தினா்களாக அயா்லாந்து நாட்டைச் சோ்ந்த முதன்மை நிா்வாக அலுவலா் பெலிம் மொய்லன், இயக்குநா் மிக்கேல்ஸ்வின்னி ஆகியோா் கலந்து கொண்டனா்.

மாநாட்டில் பருவநிலை மாற்றமும், விவசாயமும் என்ற தலைப்பில் பெண்கள் நடனம், நாடகம், பேச்சு என கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

நெடுங்குணம் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் ஏழுமலை, சேத்துப்பட்டு பேரூராட்சி மன்ற உறுப்பினா்கள் கதிரவன், சரவணன், ரமேஷ், பத்மகுமாா் மற்றும் திருவண்ணாமலை, வேலூா், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி என பல்வேறு பகுதிகளில் இருந்து 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அன்னையா்கள் கலந்து கொண்டனா்.