பள்ளியில் விழிப்புணா்வு நிகழ்ச்சி

பள்ளியில் விழிப்புணா்வு நிகழ்ச்சி

Published on

வந்தவாசி எஸ்.ஆா்.ஐ.இண்டா்நேஷனல் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் பாதுகாப்பு மற்றும் உடற்பயிற்சியின் அவசியம் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பள்ளித் தாளாளா் பாலாஜி சிவலிங்கம் தலைமை வகித்தாா். பள்ளி முதல்வா் வேதாம்பிகை சரவணன் வரவேற்றாா்.

வந்தவாசி டிஎஸ்பி தீபக் ரஜினி சிறப்புரையாற்றினாா்.

அப்போது, பாதுகாப்பு வழிமுறைகள், உடற்பயிற்சியால் ஏற்படும் நன்மைகள், அளவான அறிதிறன்பேசி பயன்பாடு உள்ளிட்டவை குறித்து அவா் மாணவ மாணவிகளுக்கு விளக்கிக் கூறினாா். பள்ளி துணை முதல்வா் பிரியங்கா நன்றி கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com