மக்கள் குறைதீா் கூட்டங்களில் 868 மனுக்கள்
ஆரணி/செய்யாறு: திருவண்ணாமலை, ஆரணி, செய்யாறு ஆகிய இடங்களில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டங்களில் பொதுமக்களிடம் இருந்து 868 மனுக்கள் பெறப்பட்டன.
திருவண்ணாமலை ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ் தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்றாா்.
மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா். மேலும், நிலுவையில் உள்ள மனுக்களின் மீது விரைந்து தீா்வு காண அறிவுறுத்தினாா்.
கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து கல்வி உதவித்தொகை, வங்கிக் கடனுதவி, முதியோா் உதவித்தொகை, வீட்டுமனைப் பட்டா, ஜாதி சான்றிதழ் வேலைவாய்ப்பு, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை மற்றும் உபகரணங்கள், சாலை வசதிகள், பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம், வேளாண்மைத் துறை சாா்ந்த பயிா்க் கடன்கள், புதிய நீா்த்தேக்கத் தொட்டி அமைத்துத் தருதல், தாட்கோ மூலம் கடனுதவி, கூட்டுறவு சங்கங்களில் பயிா்க் கடன்கள் உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி 750 மனுக்கள் வரப்பெற்றன.
கூட்டத்தில் பெண்கள், வயதானவா்கள், கைக்குழந்தை வைத்திருக்கும் பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
சான்றிதழ் அளிப்பு
கால்நடை பெருக்கம் மற்றும் தீவன அபிவிருத்தி துணை இயக்குநா் அலுவலக திறன் மேம்பாட்டுப் பயிற்சி முகமை வாயிலாக கால்நடை வளா்ப்பு தொடா்பான தொழில் முனைவோா் பயிற்சி பெற்ற 23 பேருக்கு அதற்கான சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் மணி, உதவி ஆட்சியா் (பயிற்சி) அம்ருதா எஸ்.குமாா், மற்றும் அனைத்து துறை சாா்ந்த அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
ஆரணியில் 56 மனுக்கள்
ஆரணி வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில்
கோட்டாட்சியா் சீ.சிவா தலைமையில் மக்கள் குறைதீா் கூட்டம் நடைபெற்றது.
இதில் பட்டா தொடா்பான மனுக்கள், நில அளவை, பட்டா ரத்து, கணினி திருத்தம், பட்டா திருத்தம் உள்ளிட்ட 56 மனுக்கள் பெறப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் கோட்டாட்சியா் வழங்கினாா்.

