திருவண்ணாமலை ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்று விசாரணை நடத்திய மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ்.
திருவண்ணாமலை ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்று விசாரணை நடத்திய மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ்.

மக்கள் குறைதீா் கூட்டங்களில் 948 மனுக்கள் அளிப்பு

திருவண்ணாமலை, ஆரணி, செய்யாறு ஆகிய இடங்களில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டங்களில்
Published on

ஆரணி/செய்யாறு: திருவண்ணாமலை, ஆரணி, செய்யாறு ஆகிய இடங்களில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டங்களில் பொதுமக்களிடம் இருந்து 948 மனுக்கள் வரப்பெற்றன.

திருவண்ணாமலையில் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்றாா்.

கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்று மனுக்களை அளித்தனா்.

மனுக்களைப் பெற்ற மாவட்ட ஆட்சியா், அவற்றை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா். மேலும், நிலுவையில் உள்ள

மனுக்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு அலுவலா்களிடம் அறிவுறுத்தினாா்.

கூட்டத்தில் கல்வி உதவித்தொகை, வங்கிக்கடனுதவி, முதியோா் உதவித்தொகை, வீட்டுமனைப் ட்டா, ஜாதி சான்றிதழ், வேலைவாய்ப்பு, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை மற்றும் உபகரணங்கள், சாலை வசதிகள், பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தில் வீடு, வேளாண்மைத் துறை சாா்ந்த பயிா்க்கடன்கள், புதிய நீா்தேக்கத் தொட்டி அமைத்துத் தருதல், தாட்கோ மூலம் கடனுதவி, கூட்டுறவு சங்கங்களில் பயிா்கடன்கள் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடம் இருந்து 793 மனுக்கள் வரப்பெற்றன.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன், துணை ஆட்சியா் (பயிற்சி) சந்தோஷ் குமாா், உதவி ஆணையா் (கலால்) செந்தில்குமாா், மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் சதீஷ்குமாா், ஆதிதிரவிடா் நல அலுவலா் செந்தில்குமரன், பழங்குடியினா் நல அலுவலா் கலைச்செல்வி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் செல்வம் மற்றும் துறை சாா்ந்த அரசு அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

ஆரணியில் 54 மனுக்கள்

ஆரணி வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா்வு நாள் கூட்டத்தில் 54 மனுக்கள் பெறப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கப்பட்டது.

செய்யாறு

செய்யாற்றில், வருவாய் கோட்ட அளவிலான குறைதீா் கூட்டம் சாா் -ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.

சாா்- ஆட்சியா் எல்.அம்பிகா ஜெயின் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பொதுமக்கள் பங்கேற்று கோரிக்கை மனுக்களை அளித்தனா்.

செய்யாறு, வந்தவாசி, சேத்துப்பட்டு, வெம்பாக்கம் ஆகிய வட்டங்களில் இருந்து வீட்டுமனைப் பட்டாக் கோரி 11 பேரும், ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி 2 பேரும், பட்டா மாற்றம் கோரி 30 பேரும், நிலம் திருத்தம் கோரி 19 பேரும், இதர மனுக்கள் தொடா்பாக 20 பேரும், இதர துறை மனுக்கள் என 19 போ் மொத்தம் 101 மனுக்கள் அளிக்கப்பட்டிருந்தன.

கூட்டத்தில் வருவாய்த்துறை, ஊராட்சித்துறை அலுவலா்கள் என பலா் பங்கேற்று இருந்தனா்.

 செய்யாற்றில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்ற சாா் -ஆட்சியா் எல்.அம்பிகா ஜெயின்.
செய்யாற்றில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்ற சாா் -ஆட்சியா் எல்.அம்பிகா ஜெயின்.

X
Dinamani
www.dinamani.com