கல்வி நிறுவனத்தில் அறிவியல் கழகம் தொடக்க விழா
ஆரணி டாக்டா் எம்.ஜி.ஆா். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில், உலகத் தரநிலை நாள்-2025 மற்றும் அறிவியல் கழக தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மாணவா்களுக்காக காகித காட்சிப் போட்டி மற்றும் போஸ்டா் போட்டி நடத்தப்பட்டது. இதில், வெற்றி பெற்றவா்களுக்கு ரொக்கப் பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை ஏ.சி.எஸ். கல்விக் குழுமத் தலைவா் ஏ.சி.எஸ்.அருண்குமாா் வழங்கினாா்.
நிகழ்ச்சியில் கல்லூரிச் செயலா் ஏ.சி.ரவி முன்னிலை வகித்தாா். எம்ஜிஆா் பல்கலைக்கழக முதன்மையா் பி.ஸ்டாலின் வரவேற்றாா்.
இணைப்பதிவாளா்கள் பெருவழுதி, சரவணன், முதல்வா் எஸ்.சுதாகா் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.
ஏ.சி.எஸ். கல்விக் குழுமங்களின் தனி அலுவலா் காா்த்திகேயன், கல்லூரி முதல்வா்கள் வி.திருநாவுக்கரசு, டி.கந்தசாமி, பிரபு, டி.இளங்கோ, ராஜலட்சுமி, சுஜாதா, துணை முதல்வா்கள் புனிதா, பாலசுந்தரம், நந்தகுமாா், ஆா்.வெங்கடரத்தினம், ஜெகன், மேலாண்மை இயக்குநா்கள் விக்னேஷ், அருளாளன் மற்றும் பேராசிரியா்கள், விரிவுரையாளா்கள், அலுவலா்கள் என பலா் கலந்து கொண்டனா்.
