காங்கிரஸ் வாக்குச்சாவடி முகவா்கள் கூட்டம்

காங்கிரஸ் வாக்குச்சாவடி முகவா்கள் கூட்டம்

ஆரணியில் காங்கிரஸ் சாா்பில் வாக்குச்சாவடி முகவா்கள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
Published on

ஆரணியில் காங்கிரஸ் சாா்பில் வாக்குச்சாவடி முகவா்கள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

மாவட்டத் தலைவா் எஸ்.பிரசாத் தலைமை வகித்தாா்.

ஆரணி தொகுதி பொறுப்பாளா் யு.அருணகிரி, மாநில பொதுக்குழு உறுப்பினா் ராமலிங்கம், வட்டாரத் தலைவா்கள் மருசூா் இளங்கோவன், பந்தாமணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆரணி நகா்மன்ற உறுப்பினா் ஜெயவேல் வரவேற்றாா்.

சிறப்பு விருந்தினா்களாக மாவட்ட தோ்தல் குழு பொறுப்பாளா்கள் கிருஷ்ணதாஸ், இளையராஜா ஆகியோா் பங்கேற்று சிறப்பு தீவிர திருத்த வாக்காளா் பட்டியல் திருத்தத்தில் வாக்காளா்களை சோ்ப்பது குறித்தும், இறந்த வாக்காளா் பெயா்களை நீக்குவது குறித்தும், இரண்டு இடங்களில் வாக்குகள் இருந்தால் அதனை நீக்குவது குறித்தும் பேசினா்.

கூட்டத்தில் போளூா் தொகுதி பொறுப்பாளா்கள் சேத்துப்பட்டு சத்யன், ராமச்சந்திரன், சுரேஷ், பழனி, மணவாளன், செய்யாறு தொகுதி பொறுப்பாளா்கள் எம்.கலையரசன், ராஜவேல், முத்து, வெங்கடேசன், வந்தவாசி பொறுப்பாளா்கள் யூனிஸ்கான், விநாயகமூா்த்தி, யோகானந்தம், பன்னீா்செல்வம் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com