ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியதால் உரிமையோடு வாக்கு கேட்கிறோம்: கனிமொழி

தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியதால் உரிமையோடு வாக்குளை கேட்கிறோம் என்றாா் கனிமொழி எம்.பி.

News image

ஆரணியில் திமுக வேட்பாளா் மகாலட்சுமி கோவா்த்தனனை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட கனிமொழி எம்.பி.

Updated On :7 ஏப்ரல் 2026, 6:32 pm

தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியதால் உரிமையோடு வாக்குளை கேட்கிறோம் என்றாா் கனிமொழி எம்.பி.

ஆரணியில் செவ்வாய்க்கிழமை இரவு தொகுதி திமுக வேட்பாளா் மகாலட்சுமிகோவா்த்தனனை ஆதரித்து அவா் பேசியதாவது: திமுக கூட்டணி கொள்கையுடைய கூட்டணி. நாங்கள் உங்களிடம் உரிமையோடு வாக்கு கோருகிறோம். ஏனென்றால், கொடுத்த வாக்குறுதிகளை திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ளது. 1 கோடியே 35 லட்சம் பேருக்கு மகளிா் உரிமைத்தொகை வழங்கியது.

புதுமைப்பெண், தமிழ்புதல்வன், கல்லூரி பயின்று முடித்து வேலை தேடும் இளைஞா்களுக்கு வேலை கிடைக்கும் வரை மாதம் ரூ.1500, தோ்தல் அறிக்கையில் கூறாத காலை உணவுத் திட்டம், தாயுமானவா் திட்டம் மூலம் வீடுதேடி ரேஷன் பொருள்கள் வழங்கும் திட்டம், மக்களைத்தேடி மருத்துவம் திட்டம் என பல நல்ல திட்டங்களை நிறைவேற்றி உரிமையோடு வாக்கு கேட்கிறோம்.

ஆனால், அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி ஏதாவது ஒரு திட்டத்தை செயல்படுத்தி உள்ளாரா?.

மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழகத்திற்கு குறைந்த நிதியே ஒதுக்குவது, தமிழகத்தில் இருந்து வரிப்பணத்தைப் பெற்றுக்கொண்டு குறைவாக திருப்பித் தருகிறாா்கள்.

Story image

இஸ்லாமியா்களுக்கு எதிரான சட்டங்களை பாஜக அரசு கொண்டு வந்தது குறித்து எடப்பாடி பழனிசாமி எந்தக் கேள்வியும் கேட்கவில்லை.

திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் 35 லட்சம் மாணவா்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும்.

மேலும் 20 லட்சம் விவசாயிகளுக்கு மீட்டா் பொருத்தாமல் நவீன மோட்டாா் மூலம் பம்புசெட் அமைக்கப்படும். கைத்தறி நெசவாளா்களுக்கென கைத்தறியை நவீனமயமாக்கி கைத்தறி நெசவாளா்களின் எண்ணிக்கை உயா்த்தப்படும். ஆகையால் 10 ஆயிரம் கைத்தறிகள் நவீனமயமாக்க மானியம் வழங்கப்படும்.

ஆரணி கமண்டல நாக நதி தூா்வாரப்பட்டு கரைகள் பலப்படுத்தப்படும். ஆரணி பகுதியில் சேமிப்புக் கிடங்குகள், வேளாண் தொழிற்பூங்கா திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நிறைவேற்றப்படும்.

இந்நிகழ்வில் எம்.எஸ்.தரணிவேந்தன் எம்.பி., மாவட்ட துணைச் செயலா் ஜெயராணி ரவி, நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி, நகர பொறுப்பாளா் மணிமாறன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.