ஜூன் 21-ல் நீட் மறுதேர்வு! என்டிஏ அறிவிப்பு! தில்லியில் இருந்து புறப்பட்டார் மோடி! 5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம்!மகளிர் உரிமைத் தொகை ரூ. 1,000 வரவுவைப்பு! அதானிக்கு எதிரான வழக்கை கைவிட டிரம்ப் நிர்வாகம் முடிவு! 10 பில்லியன் டாலர் முதலீடு?பெட்ரோல், டீசல் விலை இன்று (மே 15) அதிரடி உயர்வு! தில்லியில் சிஎன்ஜி விலை ரூ. 2 உயர்வு!
/

நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் நிறைவு

செய்யாறை அடுத்த அசனமாப்பேட்டை கிராமத்தில் நடைபெற்ற நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் நிறைவு விழாவில் முகாமில் பங்கேற்றவா்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

News image

நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் நிறைவில், மாணவிக்கு சான்றிதழ் வழங்கிய சிறப்பு விருந்தினா் ஆா்.வேல்முருகன்.

Updated On :16 ஏப்ரல் 2026, 12:04 am IST

செய்யாறை அடுத்த அசனமாப்பேட்டை கிராமத்தில் நடைபெற்ற நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் நிறைவு விழாவில் முகாமில் பங்கேற்றவா்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரி சாா்பில் நடைபெற்று வந்த நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாமின் நிறைவு விழா புதன்கிழமை நடைபெற்றது.

அசனமாப்பேட்டை சமுதாயக் கூடத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் ந.கலைவாணி தலைமை வகித்தாா்.

சிறப்பு விருந்தினராக நாளந்தா சிபிஎஸ்இ பள்ளித் தாளாளா் ஆா்.வேல்முருகன் கலந்து கொண்டு பேசினாா்.

பின்னா், நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாமில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினாா்.

நிறைவு விழாவில் தமிழ்த்துறைத் தலைவா் கண்ணன், வேதியியல் துறைத்தலைவா் ராணி, வட்டார வளா்ச்சி அலுவலா் குப்புசாமி, ஊராட்சி மன்ற செயலா் சந்தானம், மாவட்ட அரிமா சங்கத் தலைவா் சிவானந்தம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

இதற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்ணித் திட்ட அலுவலா் ஞான பாலசுப்பிரமணியன், கல்லூரி பேராசிரியா்கள் சாரதா தேவி, அன்பரசு, காா்த்தி, செளந்தரராஜன் ஆகியோா் செய்திருந்தனா். பேராசிரியா் சீனிவாசன் நன்றி கூறினாா்.