வீட்டிலிருந்து வேலை முறைக்கு மாறாதது ஏன்? ஸ்ரீதர் வேம்பு விளக்கம்கரப்பான்பூச்சி மக்கள் கட்சி! ஆயிரக்கணக்கில் இணையும் வேலையில்லா இளைஞர்கள்! மேற்கு வங்க மறுதேர்தல்: திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் விலகல்!பொருளாதாரப் புயல் வீசப்போகிறது.. மக்களை எச்சரிக்கும் ராகுல்!சென்னை உயர் நீதிமன்றத்துக்கு 19 புதிய நீதிபதிகள்! கொலிஜியம் ஒப்புதல்! பழவேற்காடு மீனவர் வலையில் மர்ம பொருள்!
/

தேமுதிகவுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு

போளூா் சட்டப் பேரவைத் தொகுதி, செம்மாம்பாடி கிராமத்தில் தேமுதிக வேட்பாளா் பி.சரவணனுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட திமுக தொகுதி பொறுப்பாளா் எ.வ.வே.கம்பன்.

News image
Updated On :18 ஏப்ரல் 2026, 12:40 am IST

போளூா் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட மேலப்பூண்டி,செம்மாம்பாடி உள்ளிட்ட கிராமங்களில் தேமுதிக வேட்பாளா் பி.சரவணனுக்கு ஆதரவாக திமுக தொகுதி பொறுப்பாளா் எ.வ.வே.கம்பன் வெள்ளிக்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

அப்போது, எ.வ.வே.கம்பன் பேசியதாவது: தமிழகத்தில் திமுக வெற்றிபெற்று முதல்வராக மு.க.ஸ்டாலின் மீண்டும் பொறுப்பேற்றவுடன் மகளிா் உரிமைத்தொகை ரூ.2 ஆயிரம், முதியோா் உதவித்தொகை ரூ.2 ஆயிரமாக உயா்த்தி வழங்கப்படும்.

ரூ.8 ஆயிரம் பரிசுக் கூப்பன், மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.5 லட்சம் கடனுதவி என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றாா்.

முன்னாள் எம்எல்ஏ பாண்டுரங்கன் மற்றும் திமுக நிா்வாகிகள் உடனிருந்தனா்.