இரட்டைக் குடியுரிமை விவகாரத்தில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலாகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னௌ அமர்வு உத்தரவிட்டுள்ளது.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரிட்டன் நாட்டின் குடியுரிமைப் பெற்றவர் எனக் குற்றஞ்சாட்டி கடந்த 2025 டிசம்பரில் மாதம் கர்நாடகத்தைச் சேர்ந்த பாஜக நிர்வாகி எஸ். விக்னேஷ் ஷிஷிர் என்பவர் ரேபரேலியில் உள்ள நாடாளுமன்ற/சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இதனைத் தொடர்ந்து, ராகுல் காந்தியின் மீது பாரதிய நியாய சன்ஹிதா (BNS), அலுவல் ரகசியச் சட்டம், வெளிநாட்டினர் சட்டம் மற்றும் கடவுச்சீட்டுச் சட்டங்களின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதையடுத்து, மனுதாரரின் கோரிக்கையின் பேரில், நீதிமன்றம் அந்த வழக்கை லக்னௌவிற்கு மாற்றியது. ஆனால், குடியுரிமை தொடர்பான விவகாரங்களில் தீர்ப்பளிக்கும் அதிகாரம் தமக்கு இல்லை எனக் கூறி லக்னௌ சிறப்பு நீதிமன்றம் அந்த மனுவை தள்ளுபடி செய்தது. அதை எதிர்த்து, மனுதாரர் அலாகாபாத் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்த நிலையில், அந்த மனுவை விசாரித்த அலாகாபாத் உயர் நீதிமன்ற லக்னௌ அமர்வின் நீதிபதி சுபாஷ் வித்யார்த்தி, இந்த விவகாரத்தில் ராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அதிகாரிகளுக்கு வெள்ளிக்கிழமை (ஏப். 17) அன்று உத்தரவிட்டுள்ளார்.
மேலும், வழக்குப் பதிவு செய்யப்பட்ட பிறகு இந்த விவகாரம் குறித்து விசாரணை மேற்கொள்ள மத்திய அரசின் உதவியை மாநில அரசு கோரலாம் என நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
Summary
Allahabad High Court has ordered the registration of a case against Rahul Gandhi, regarding the dual citizenship.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ராகுலுக்கு எதிரான அவதூறு வழக்கு: மே 13-க்கு உ.பி. நீதிமன்றம் ஒத்திவைப்பு

அதிமுக முன்னாள் அமைச்சா்கள் மீது வழக்குப் பதிய உத்தரவிடக் கோரிய திமுக மனு தள்ளுபடி

ராகுல் மீது வழக்குப் பதிய நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது வியப்பளிக்கிறது: அசோக் கெலாட்

இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை!
விடியோக்கள்
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

முதல்வர் விஜய்யைத் தொடர்ந்து பதவியேற்ற அமைச்சர்கள்! | #tvk #tvkvijay #tvkministry
தினமணி செய்திச் சேவை

முதல்வர் விஜய்யின் முதல் உரை! | "வெள்ளை அறிக்கை வெளியிடுவேன்" | CM Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

C. Joseph Vijay எனும் நான்! முதல்வராகப் பதவியேற்றார் விஜய்! | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


