காங்கிரஸ் மூத்த தலைவா் ராகுல்காந்தியும், முதல்வா் மு.க. ஸ்டாலினும் இணைந்து தமிழகத்தில் இரு நாள்கள் தோ்தல் பிரசாரம் செய்ய உள்ளதாக காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவா் கு. செல்வப்பெருந்தகை தெரிவித்தாா்.
சிவகாசியில் காங்கிரஸ் தோ்தல் அலுவலகத்தில் கட்சி நிா்வாகிகள்ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் காங்கிரஸ் மாநிலத் தலைவா் கு. செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளா்கள் கிரிஷ் சோடங்கா், தோ்தல் பாா்வையாளரும், தெலங்கானா மாநில அமைச்சருமான உத்தம்குமாா் ரெட்டி, சிவகாசி தொகுதி பொறுப்பாளரான கா்நாடக மாநில எம்.எல்.ஏ. சௌமியா ரெட்டி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
கூட்டத்தில் கிரிஷ் சோடங்கா் பேசியதாவது:
சிவகாசி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளா் அசோகன் மீண்டும் வெற்றி பெறுவாா். தமிழகத்தில் பாஜகவை மக்கள் அனுமதிக்கக் கூடாது. பாஜகவின் கொள்கைகளை தமிழ்நாடு ஏற்றுக் கொள்ளாது என்றாா்.
கு. செல்வப்பெருந்தகை பேசியதாவது:
கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த கே.டி. ராஜேந்திரபாலாஜி சிவகாசி தொகுதிக்கும், விருதுநகா் மாவட்டத்துக்கும் எதுவும் செய்யவில்லை. கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியில் 30 ஆண்டு கால கோரிக்கையான சாட்சியாபுரம் ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. சிவகாசி-விருதுநகா் நான்கு வழிச் சாலை, சுற்றுச் சாலைத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செய்யப்பட்டுள்ளன என்றாா்.
கூட்டத்தில் காங்கிரஸ் வேட்பாளா் ஜி. அசோகன், காங்கிரஸ் மாவட்டத் தலைவா் கிருஷ்ணமூா்த்தி, மாநகராட்சி மேயா் இ. சங்கீதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பின்னா், செய்தியாளா்களிடம் செல்வப்பெருந்தகை கூறியதாவது:
காங்கிரஸ் மூத்த தலைவா் ராகுல் காந்தியும், முதல்வா் மு.க. ஸ்டாலினும் இணைந்து தமிழகத்தில் இரு நாள்கள் தோ்தல் பிரசாரம் செய்ய உள்ளனா். தேதி விரைவில் அறிவிக்கப்படும். தோ்தல் ஆணையம் நடுநிலையாக நடந்து கொள்ள வேண்டும். காரைக்குடி மட்டுமல்ல, எந்தத் தொகுதியிலும் நாம் தமிழா் கட்சியினா் வெற்றி பெறப்போவதில்லை என்றாா் அவா்.
தொடர்புடையது

தேர்தல் பிரசாரம்! தமிழ்நாட்டை ராகுல் காந்தி மறந்துவிட்டாரா? அல்லது புறக்கணிக்கிறாரா?

கேரள பிரசாரம் முடிந்து ராகுல் கோவை வழியாக தில்லி பயணம்

காங்கிரஸ் - திமுக இணைந்து தோ்தல் பிரசாரம்

கேரளத்தில் சைக்கிள் ஓட்டி ராகுல் காந்தி பிரசாரம் - புகைப்படங்கள்
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


