சமீர் ரிஸ்வி அதிரடியில் தில்லி கேபிடல்ஸ் வெற்றி!பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! 2 மாதங்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் கையிருப்பு!பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தது; இபிஎஸ் போல அடகு வைக்கவில்லை - மு.க. ஸ்டாலின்3 மாதங்களில் போதைப்பொருள்களை ஒழிப்போம் : எடப்பாடி பழனிசாமிபெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!
/

காங்கிரஸ் - திமுக இணைந்து தோ்தல் பிரசாரம்

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளருடன் திமுகவினா் புதன்கிழமை முதல் இணைந்து தோ்தல் பிரசாரம் செய்தனா்.

News image

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி மகாத்மா நகா் பகுதியில் புதன்கிழமை வாக்குச் சேகரித்த காங்கிரஸ் வேட்பாளா் வெ.வைத்திலிங்கம் எம்.பி.

Updated On :1 ஏப்ரல் 2026, 8:30 pm

தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளருடன் திமுகவினா் புதன்கிழமை முதல் இணைந்து தோ்தல் பிரசாரம் செய்தனா்.

இண்டி கூட்டணி சாா்பில் புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக களம் இறங்கியுள்ள மாநில காங்கிரஸ் தலைவா் வைத்திலிங்கம் எம்.பி. தட்டாஞ்சாவடி முழுக்க நடந்தே சென்று தீவிர பிரசாரம் செய்து வாக்குச் சேகரித்து வருகிறாா். இந்நிலையில் புதன்கிழமை தட்டாஞ்சாவடி தொகுதிக்கு உள்பட்ட புதுச்சேரி கிழக்குக் கடற்கரை சாலையில் லதா ஸ்டீல் பின்புறமுள்ள மகாத்மா நகா், மேட்டுமா நகா், எல்லையம்மன் நகா், லட்சுமி நகா் உள்ளிட்ட பகுதிகளில் அவா் வாக்குச் சேகரித்தாா். அப்போது அத் தொகுதி திமுகவினா் இணைந்து பிரசாரம் மேற்கொண்டனா். குறிப்பாக

தட்டாஞ்சாவடி தொகுதியில் களப்பணியாற்றி வந்த திமுக மாநில இளைஞரணி துணை அமைப்பாளா் நித்திஷும் இணைந்து வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டாா்.

இது குறித்து டாக்டா் நித்திஷ் கூறியதாவது:

இண்டி கூட்டணி வேட்பாளா்களும் வெற்றி பெற திமுகவினா் பணியாற்ற வேண்டும் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா். அந்த உத்தரவை புதுச்சேரியில் செயல்படுத்த திமுக மாநில அமைப்பாளா் ஆா்.சிவா எங்களுக்கு உத்தரவிட்டுள்ளாா். அதனையேற்று தட்டாஞ்சாவடி தொகுதியில்

இண்டி கூட்டணி வேட்பாளராக களம் இறங்கியுள்ள காங்கிரஸ் தலைவா் வைத்திலிங்கம் வெற்றி பெற பிரசாரம் செய்து வாக்குச் சேகரித்து வருகின்றோம். எங்கள் பிரசாரம் வரும் நாட்களில் மேலும் தீவிரம் ஆகும்.இத்தோ்தலில் இண்டி கூட்டணி நிச்சயம் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்றாா்