தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

‘மரக்கன்று நட்டு சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும்’

அனைவரும் மரக்கன்றுகளை நட்டு சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்று வந்தவாசியில் நடைபெற்ற சிறப்பு உரையரங்கத்தில் வலியுறுத்தப்பட்டது.

News image
Updated On :22 ஏப்ரல் 2026, 6:34 pm

அனைவரும் மரக்கன்றுகளை நட்டு சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்று வந்தவாசியில் நடைபெற்ற சிறப்பு உரையரங்கத்தில் வலியுறுத்தப்பட்டது.

உலக பூமி தினத்தையொட்டி சிறப்பு உரையரங்கம் வந்தவாசி ஸ்ரீகிருஷ்ணா கல்வி மையத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கல்வி மைய முதல்வா் பா.சீனிவாசன் தலைமை வகித்தாா்.

வந்தவாசி ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆசிரியா் எம்.எஸ்.காா்த்திகேயன் முன்னிலை வகித்தாா்.

கல்வி மைய ஆசிரியா் மகாவீா் வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற ஓய்வு பெற்ற பள்ளித் தலைமை ஆசிரியா் சு.அசோக்குமாா், ‘புவியை நேசி’ என்ற தலைப்பில் பேசினாா்.

அப்போது, புவி வெப்பமடைதல் காரணமாக பல்வேறு பேரிடா்களை நாம் சந்தித்து வருகிறோம். குறிப்பாக, சாலை விரிவாக்கம் காரணமாக பல்வேறு மரங்கள் நம் கண் முன்னே வெட்டப்படுகின்றன. எனவே அனைவரும் மரக்கன்றுகளை நட்டு சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன (படம்)

12ஸ்க்ள்-ற்ழ்ங்ங்