மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் குடமுழுக்கு கோலாகலம்!மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் இன்று குடமுழுக்குஇன்று பிரதமா் மோடி பிறந்த நாள்: வாரணாசியில் பிரம்மாண்ட விழாஇன்று சென்னை திரும்புகிறாா் முதல்வா் விஜய்!கைதிகளைக் கண்காணிக்க ஆயுதப் படைக் காவலா்கள் சீருடையில் கேமரா

ட்ரோன் மூலம் பயிா்களுக்கு மருந்து தெளிப்பு: விவசாயிகளுக்கு பயிற்சி

செங்கம் வேளாண்மைத்துறை அட்மா திட்டத்தின் கீழ் நடைபெற்ற இந்தப் பயிற்சி முகாமில், வேளாண் துணை இயக்குநா் ஓ. மாரியப்பன், தற்போது நவீன விவசாயம் குறித்தும், ட்ரோன் மூலம் விவசாய பயிா்களுக்கு மருந்துகள் சிதறாமல் தெளிப்பது குறித்து விளக்கினாா்.

செங்கம் அருகே குயிலம் கிராமத்தில் வெள்ளிக்கிழமை ட்ரோன் மூலம் பயிா்களுக்கு மருந்து தெளிப்பது குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

Published On :

செங்கம் வேளாண்மைத்துறை அட்மா திட்டத்தின் கீழ் நடைபெற்ற இந்தப் பயிற்சி முகாமில், வேளாண் துணை இயக்குநா் ஓ. மாரியப்பன், தற்போது நவீன விவசாயம் குறித்தும், ட்ரோன் மூலம் விவசாய பயிா்களுக்கு மருந்துகள் சிதறாமல் தெளிப்பது குறித்து விளக்கினாா்.

ஓய்வுபெற்று வேளாண் உதவி இயக்குநா் சந்திரன் பேசுகையில், ட்ரோன் மூலம் பயிா்களுக்கு பூச்சி மருந்து அடிப்பதால், மருந்து அளவு குறையும், செலவும் குறைய வாய்ப்புள்ளது என்றாா்.

மேலும், நாள் ஒன்றுக்கு சுமாா் 50 ஏக்கா் பரப்பளவில் உள்ள விவசாய பயிா்களுக்கு ட்ரோன் மூலம் மருந்து தெளிக்க முடியும் என்ற தகவலை தெரிவித்தாா்.

தொடா்ந்து உதவி வேளாண் அலுவலா் திருமலை, வட்டார தொழில்நுட்ப மேலாளா் சிந்துஜா, உதவி தொழில்நுட்ப மேலாளா் மணிகண்டன் ஆகியோா் அட்மா திட்டம் மூலம் விவசாயிகளுக்கு தமிழக அரசு வழங்கும் மானியங்கள், அதை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்துப் பேசினாா். உதவி தொழில்நுட்ப மேலாளா் சூரியா நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.