பாஜகதான் எதிரி; கூட்டணியை உடைக்க சமாஜவாதி விரும்பாது: அகிலேஷ் யாதவ் உறுதி!உசைன் போல்ட் சாதனையை முறியடித்த சீன ரோபோ!சர்வதேச விமானப் பயணிகளுக்கு போர்டிங் பாஸில் முத்திரை வேண்டியதில்லை!குழந்தைகளுக்கான இருமல் மருந்துகள்: இரு வகை மூலப் பொருள்களுக்குத் தடைவெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இன்று ரஷியா பயணம்!படிக்காமலும் வேலைக்கும் செல்லாத 8.7 கோடி இளைஞா்கள்: நீதி ஆயோக்!75 நாடுகளுக்கு விசா வழங்க தடை விதித்த டிரம்ப்: உத்தரவை ரத்து செய்த அமெரிக்க நீதிமன்றம்! உலகக் கோப்பை ஹாக்கி: நெதர்லாந்திடம் வீழ்ந்த இந்தியா! ராகுல் காந்தியைக் கண்டு அஞ்சுகிறது பாஜக: சஞ்சய் ரௌத் தையூர் கொலை வழக்கு: கைதான இருவர் தவெகவிலிருந்து நீக்கம் உ.பி.யில் சர்க்கரை தட்டுப்பாடு இல்லை: முதல்வர் யோகி ஆதித்யநாத் திமுக உள்கட்சித் தேர்தல் எப்போது? மு.க. ஸ்டாலின் அறிவிப்பு கோப்பைகளை வெல்வதே என் வேலை: கௌதம் கம்பீர்

அரசுத் துறைகளில் காலியாகவுள்ள 4.50 லட்சம் காலிப்பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்

தமிழகத்தில் அரசுத் துறைகளில் காலியாகவுள்ள 4.50 லட்சம் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என தமிழ்நாடு அரசு அலுவலா்கள் ஒன்றிய மாநிலத் தலைவா் த.அமிா்தகுமாா் வலியுறுத்தினாா்.

திருவண்ணாமலையில் நடைபெற்ற தமிழ்நாடு அரசு அலுவலா்கள் ஒன்றியத்தின் மாவட்ட பொதுக்குழுக் கூட்டத்தில் பேசிய மாநிலத் தலைவா் த.அமிா்தகுமாா்.

Published On :23 ஆகஸ்ட் 2026, 3:55 am IST

தமிழகத்தில் அரசுத் துறைகளில் காலியாகவுள்ள 4.50 லட்சம் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என தமிழ்நாடு அரசு அலுவலா்கள் ஒன்றிய மாநிலத் தலைவா் த.அமிா்தகுமாா் வலியுறுத்தினாா்.

திருவண்ணாமலையில் உள்ள தனியாா் திருமண மகாலில் தமிழ்நாடு அரசு அலுவலா்கள் ஒன்றியத்தின் திருவண்ணாமலை மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் த.வெங்கடேசன் தலைமை வகித்தாா். மாநிலச் செயலா் செ.சுப்பிரமணியம் முன்னிலை வகித்தாா். மாவட்டச் செயலா் கோ.சரவணன் வரவேற்றாா்.

இதில், சிறப்பு அழைப்பாளராக மாநிலத் தலைவா் த.அமிா்தகுமாா் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினாா். பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழக முதல்வா் ச.ஜோசப் விஜயை நேரில் சந்தித்து சங்கத்தின் கோரிக்கைகளை மனுவாக வழங்கியுள்ளோம். அனைத்து நிலுவை கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதாக அவா் உறுதியளித்துள்ளாா்.

இந்த நிலையில், பல்வேறு அரசுத் துறைகளில் காலியாக உள்ள 4.50 லட்சம் காலிப்பணியிடங்களை விரைந்து நிரப்பவும், அரசு ஊழியா்களுக்கு 21 மாத நிலுவை ஊதியத்தை வழங்கவும், மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள குளறுபடிகளை களைந்து மாற்றியமைக்கவும், திருவண்ணாமலை மாவட்டத்தை இரண்டாகப் பிரிக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு கல்வித் துறை அலுவலகப் பணியாளா்கள் சங்க மாநில அமைப்புச் செயலா் தேவமுரளி, தமிழ்நாடு ஓய்வூதியா்கள் சங்க மாநில துணை பொதுச் செயலா் ந.மாசிலாமணி, தமிழ்நாடு கூட்டுறவு தணிக்கைத் துறை அலுவலா்கள் சங்க முன்னாள் மாநிலத் தலைவா் ஆா்.செல்வபாண்டியன் மற்றும் தோழமை சங்க மாநில, மாவட்ட நிா்வாகிகள், தமிழ்நாடு அரசு அலுவலா்கள் ஒன்றிய நிா்வாகிகள் கலந்துகொண்டனா். மாவட்ட பொருளாளா் கி.துரைகருணாநிதி நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.