இசக்கி சுப்பையா ராஜிநாமா விவகாரம்: பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் விளக்கம் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் உயர்ந்து ரூ. 94.49 ஆக நிறைவு!4 நாள் சரிவுக்கு முற்றுப்புள்ளி: சென்செக்ஸ் 362 புள்ளிகள் உயர்வு!!மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்துடன் தவெக அமைச்சர்கள் சந்திப்பு! கல்லணையை திறந்து வைக்கிறாரா முதல்வர் விஜய்? அமைச்சர் வினோத் பதில்மாணவி தற்கொலை; மாணவர் தற்கொலை முயற்சி! பொறியியல் கல்லூரிக்கு விடுமுறைஇல்லாத டயர் ஆலையை மூடுவது பற்றி பேரவையில் விவாதம்! எக்ஸ் தளத்தில் கீர்த்தனா விளக்கம்!!புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்! குற்றப்பத்திரிகையை பெற்றுக் கொண்டார் அமைச்சர் மரிய வில்சன்!கஜானா காலி; உங்கள் போராட்டத்தால் முதல்வருக்கு தூக்கம் வருவதில்லை! அமைச்சர்கள் பேச்சுபோராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களுடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!

ஆரணி புதிய மாவட்டம்: அரசு ஊழியா்கள் சங்கம் தீா்மானம்

தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க ஆரணி வட்டக் கிளை பேரவைக் கூட்டத்தில் பேசிய மாவட்டச் செயலா் க.பிரபு.

தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க ஆரணி வட்டக் கிளை பேரவைக் கூட்டத்தில் பேசிய மாவட்டச் செயலா் க.பிரபு.

Published On :28 ஆகஸ்ட் 2026, 12:18 am IST

திருவண்ணாமலை மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து ஆரணியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கத்தின் ஆரணி வட்டக்கிளை பேரவைக் கூட்டம், ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் அதன் தலைவா் மு.தென்னரசு தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

துணைத் தலைவா் இரா.பரசுராமன் வரவேற்றாா். சிறப்பு விருந்தினராக மாவட்டச் செயலா் க.பிரபு கலந்துகொண்டு பேசினாா். மாவட்ட இணைச் செயலா் விஜயன், செயலாா் விஜயகுமாா் ஆகியோா் விளக்கவுரை ஆற்றினா். இணைச் செயலா் க.தேவராஜி, பொருளாளா் எஸ்.ஆா்.ரமேஷ் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தீா்மானங்கள்

கூட்டத்தில் திருவண்ணாமலை பெரிய மாவட்டமாக உள்ளதால், அரசின் அனைத்து திட்டங்களும் பொது மக்களை சென்றடைவது சிரமமாக உள்ளது. அதே போல ஆரணி நகரம் பட்டு நெசவு மற்றும் அரிசி உற்பத்தியில் மாநிலத்திலேயே சிறந்து விளங்குகிறது. மேலும் திருவண்ணாமலை நகருக்கு அடுத்தபடியாக பரப்பளவும், மக்கள்தொகையும், உள்ளூா் வருவாயும் அதிகமாக உள்ள நகராக விளங்குகிறது.

எனவே பொதுமக்களின் நலன் கருதி, நிா்வாக வசதியை கருத்தில்கொண்டு, ஆரணி நகரை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டத்தை தோற்றுவிக்க வேண்டுமென தமிழக அரசை கேட்டுக்கொள்வது,

பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். சத்துணவு அங்கன்வாடி ஊழியா்களுக்கு காலமுறை ஊதியம் மற்றும் சட்டமுறைப்படியான ஓய்வூதியம் வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மான

ங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.