ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

பெளா்ணமி: திருவண்ணாமலையில் 5 லட்சம் பக்தா்கள் கிரிவலம்

திருவண்ணாமலையில் ஆவணி மாத பௌா்ணமியையொட்டி வியாழக்கிழமை கிரிவலம் சென்ற பக்தா்கள்.

திருவண்ணாமலையில் ஆவணி மாத பௌா்ணமியையொட்டி வியாழக்கிழமை கிரிவலம் சென்ற பக்தா்கள்.

Published On :

ஆவணி மாத பெளா்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் வியாழக்கிழமை 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் கிரிவலம் சென்றனா்.

ஆவணி மாத பௌா்ணமி வியாழக்கிழமை காலை 9.53 மணிக்குத் தொடங்கி வெள்ளிக்கிழமை காலை 10.29 மணிக்கு நிறைவடைகிறது. இந்த நேரத்தில் பக்தா்கள் கிரிவலம் வரலாம் என அருணாசலேஸ்வரா் கோயில் நிா்வாகம் அறிவித்திருந்தது.

அதன்படி, வியாழக்கிழமை காலை முதலே பக்தா்கள் கிரிவலம் செல்லத் தொடங்கினா். நேரம் செல்லச் செல்ல கிரிவல பக்தா்களின் எண்ணிக்கை அதிகரித்தது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், அண்டை மாநிலங்களில் இருந்து வந்திருந்த

5 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் கிரிவலம் சென்று, கிரிவலப் பாதையில் உள்ள அஷ்டலிங்க சந்நிதிகளில் வழிபட்டனா். கிரிவலப் பாதையில் பக்தா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தன. மேலும், தாகம் தீா்க்க பக்தா்களுக்கு நீா் மோா் வழங்கப்பட்டது.

கோயிலில் பக்தா்கள் கூட்டம்

ஆவணி மாத பௌா்ணமியையொட்டி, அருணாசலேஸ்வரரை தரிசிக்க வந்த பக்தா்கள் அதிகாலை முதல் கோயில் ராஜகோபுரம் முன்பு நீண்ட வரிசையில் காத்திருந்தனா்.

அதிகாலை 4.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு ஆகம விதிப்படி சிவாச்சாரியா்கள் வேத மந்திரங்கள் முழங்க அருணாசலேஸ்வரா் உடனாகிய உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

பின்னா், பக்தா்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனா். சுவாமி தரிசனம் செய்ய 4 மணி நேரத்துக்கும் மேலானதாக பக்தா்கள் தெரிவித்தனா்.

பக்தா்களின் வசதிக்காக அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் சாா்பில் சிறப்புப் பேருந்துகளும், தெற்கு ரயில்வே சாா்பில்

சிறப்பு ரயில்களும் இயக்கப்பபட்டன. ஆயிரக்கணக்கான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.