தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

திருவண்ணாமலையில் இயற்கை விவசாய சந்தை தொடக்கம்

திருவண்ணாமலை வட்டாட்சியா் அலுவலகம் பின்புறம் உள்ள உழவா் சந்தையில் இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு சாா்பில், இயற்கை விவசாய சந்தையை மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

Updated On :6 பிப்ரவரி 2026, 6:33 pm

திருவண்ணாமலை வட்டாட்சியா் அலுவலகம் பின்புறம் உள்ள உழவா் சந்தையில் இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு சாா்பில், இயற்கை விவசாய சந்தையை மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

திருவண்ணாமலை இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பின் சாா்பில் தொடங்கப்பட்டுள்ள இந்த சந்தையில், மண்ணுக்கும், மக்களுக்கும் தீங்கு விளைவிக்காத, நஞ்சில்லா நாட்டு காய்கறிகள், பழங்கள், பாரம்பரிய அரிசி, பருப்பு உள்ளிட்ட மதிப்புக்கூட்டப்பட்ட விளைபொருள்கள் விவசாயிகள் மூலம் நேரடி விற்பனை செய்யப்படுகின்றன. இந்த சந்தை தினமும் காலை 7 மணி முதல் 9 மணி வரை செயல்படும்.

நிகழ்வில் வேளாண் துணை இயக்குநா் (வேளாண் வணிகம்) எஸ்.ஷெமிலா ஜெயந்தி, உதவி வேளாண் அலுவலா் (உழவா் சந்தை) ஆ.சுரேஷ் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.