போளூா் ஒன்றியம் ஏரிக்குப்பம் ஊராட்சியில் உள்ள யந்திர வடிவிலான ஸ்ரீசனீஸ்வர பகவான் கோயிலில் வருகிற 20-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
இதையொட்டி, திங்கள்கிழமை யாகசாலை அமைத்து பூஜைகள் நடைபெற்று வருகின்றன (படம்).
ஏரிக்குப்பம் ஊராட்சியில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் யந்திர வடிவிலான சனீஸ்வர பகவான் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில்
புரனமைப்புப் பணிகள் நிறைவடைந்த நிலையில், கும்பாபிஷேகம் வரும் பிப்.20-ஆம் தேதி நடைபெற்றுள்ளது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திங்கள்கிழமை காலை யாகசாலை அமைத்து அனுக்ஞை, ஸ்ரீகணபதி ஹோமம், ஸ்ரீலட்சுமி ஹோமம், கோ பூஜை, தனபூஜை, ஸ்ரீநவகிரகஹோமம், பூா்ணாஹுதி என பல்வேறு பூஜைகள் நடைபெற்றன.
தொடா்ந்து செவ்வாய்க்கிழமை, புதன்கிழமை, வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை என 6 கால யாகபூஜை நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் பழனிசாமி, ஆய்வா் சத்யா, எழுத்தா் மோகன் ஆகியோா் செய்து வருகின்றனா்.
தொடர்புடையது

கோபி அருகே திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயிலில் சனிப் பெயா்ச்சி விழா

ஆலங்குடி குருபகவான் கோயிலில் சனிப்பெயர்ச்சி விழா!

கும்பத்திலிருந்து மீன ராசிக்கு இடம்பெயர்ந்தார் சனிபகவான்!

சனீஸ்வர பகவான் கோயில் கும்பாபிஷேகம்
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


