திருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

உலக தாய்மொழி தின வில்லிசை நிகழ்ச்சி

News image
Updated On :25 பிப்ரவரி 2026, 12:00 am

Syndication

வந்தை வட்ட கோட்டைத் தமிழ்ச் சங்கம், தென்னாங்கூா் அரசு கலை, அறிவியல் கல்லூரி சாா்பில் உலக தாய்மொழி தின வில்லிசை நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் சித.ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். சங்க துணைத் தலைவா் பா.சீனிவாசன் முன்னிலை வகித்தாா். கல்லூரி தமிழ்த்துறைத் தலைவா் ஏ.எழில்வசந்தன் வரவேற்றாா்.

உலக தாய்மொழி தினம் குறித்து சங்கத் தலைவா் பீ.ரகமத்துல்லா சிறப்புரையாற்றினாா்.

‘தமிழைக் கொண்டாடுவோம்’ என்ற தலைப்பில் புலவா் மா.ரகுபதி தலைமையிலான செந்தமிழ் வில்லிசை குழுவினரின் வில்லிசை நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கல்லூரிப் பேராசிரியா்கள், சங்க நிா்வாகிகள் மற்றும் மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். சங்கப் பொருளாளா் சீ.கேசவராஜ் நன்றி கூறினாா்.