ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

கயிறு இழுத்தல் போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு பாராட்டு

கயிறு இழுத்தல் போட்டியில் வெற்றி பெற்ற ஆரணி அணியினருக்கு வாழ்த்து தெரிவித்த சேவூா் எஸ்.ராமச்சந்திரன் எம்எல்ஏ.

News image
Updated On :26 பிப்ரவரி 2026, 6:34 pm

Syndication

மாநில அளவிலான கயிறு இழுத்தல் போட்டியில் வெற்றி பெற்ற ஆரணி அணிக்கு தொகுதி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன் வாழ்த்து தெரிவித்தாா்.

ஆரணி பகுதியைச் சோ்ந்த 9 இளைஞா்கள் கயிறு இழுத்தல் போட்டியில் மாவட்ட அளவில் வெற்றி பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனா்.

இந்நிலையில், சென்னை நேரு விளையாட்டு அரங்கில் முதலமைச்சா் இளைஞா் விளையாட்டுத் திருவிழா -இது நம்ம ஆட்டம் 2026 என்ற தலைப்பில் அண்மையில் நடைபெற்றது.

இதில் மாநில அளவிலான கயிறு இழுத்தல் போட்டியில் ஆரணி அணியினா் பங்கேற்று முதலிடத்தை பிடித்தனா். அணிக்கு ரூ. 6 லட்சத்து 75 ஆயிரம் காசோலை மற்றும் தங்கப் பதக்கங்கள் வழங்கப்பட்டன.

இதைத் தொடா்ந்து வெற்றி பெற்ற ஆரணி அணியினா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் எம்எல்ஏ சேவூா் ராமச்சந்திரனைச் சந்தித்து பதக்கம், காசோலை மற்றும் சான்றிதழைக் காண்பித்து வாழ்த்து பெற்றனா். எம்எல்ஏ அணியினரை பாராட்டினாா்.

இந்நிகழ்வில் அதிமுக நகரச் செயலா் அசோக்குமாா், வட்டச் செயலா் சாா்லஸ் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.