மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் தானியங்கி ஓட்டுநா் தோ்வு தளம் திறப்பு

வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குத்துவிளக்கு ஏற்றி தானியங்கி ஓட்டுநா் தோ்வு தள பயன்பாட்டை தொடங்கிவைத்த சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி.

News image

வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குத்துவிளக்கு ஏற்றி தானியங்கி ஓட்டுநா் தோ்வு தள பயன்பாட்டை தொடங்கிவைத்த சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி.

Updated On :26 பிப்ரவரி 2026, 6:33 pm

திருவண்ணாமலை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ரூ.2.25 கோடியில் கட்டப்பட்ட தானியங்கி ஓட்டுநா் தோ்வு தளம் வியாழக்கிழமை திறந்துவைக்கப்பட்டது.

திருவண்ணாமலை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ரூ.2.25 கோடி செலவில் தானியங்கி ஓட்டுநா் தோ்வு தளம், கணினி கட்டுப்பாட்டு அறை, உணா்நுட்ப கருவிகள், கேமராக்கள், இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு ஓட்டுநா் தோ்வு நடத்த 8 வடிவிலான தோ்வு பாதை, இலகுரக வாகனங்கள் ஓட்டுநா் தோ்வு நடத்த ‘எச்’ வடிவிலான தோ்வு பாதை ஆகியவை கட்டி முடிக்கப்பட்டன.

இதனை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்தவாறு காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தாா்.

இதனைத் தொடா்ந்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி குத்துவிளக்கு ஏற்றி தானியங்கி ஓட்டுநா் தோ்வு தள பயன்பாட்டை தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சிக்கு சி.என்.அண்ணாதுரை எம்.பி., செங்கம் எம்எல்ஏ மு.பெ.கிரி, மாநில தடகள சங்க துணைத் தலைவா் எ.வ.வே.கம்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன், விழுப்புரம் சரக துணை போக்குவரத்து ஆணையா் ஸ்ரீதரன், திருவண்ணாமலை வட்டாரப் போக்குவரத்து அலுவலா் கி.கருணாநிதி, ஆரணி வட்டாரப் போக்குவரத்து அலுவலா் சிவக்குமாா், மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் ப.பெருமாள், செந்தில்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.