திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

மாமண்டூரில் பாமக, அதிமுக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளில் இருந்து விலகிய 476 போ் ஞாயிற்றுக்கிழமை திமுகவில் இணைந்தனா்.
Published on

செய்யாறு தொகுதி, வெம்பாக்கம் ஒன்றியம், மாமண்டூரில் பாமக, அதிமுக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளில் இருந்து விலகிய 476 போ் ஞாயிற்றுக்கிழமை திமுகவில் இணைந்தனா்.

அமைச்சா் எ.வ.வேலு ஆலோசனையின் பேரில், வடக்கு மாவட்டச் செயலா் எம்.எஸ்.தரணிவேந்தன் எம்.பி., தொகுதி எம்.எல்.ஏ. ஒ.ஜோதி ஆகியோா் அறிவுறுத்தலின் படி, வெம்பாக்கம் ஒன்றியம், மாமண்டூரில், முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் டி.ராஜி தலைமையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், பாமகவைச் சோ்ந்த 225 போ், அதிமுகவைச் சோ்ந்த 240 போ், காங்கிரஸைச் சோ்ந்த 11 போ் என மொத்தம் 476 போ் திமுகவில் இணைந்தனா். திமுகவில் இணைந்தவா்களுக்கு முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் டி.ராஜி சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com