பாலிடெக்னிக் கல்லூரியில்
சமத்துவ பொங்கல் விழா

பாலிடெக்னிக் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா

செ.நாச்சிப்பட்டு சக்தி பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழா.
Published on

செங்கத்தை அடுத்த செ.நாச்சிப்பட்டு சக்தி பாலிடெக்னிக் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவில் புதுப்பானையில் பொங்கல் வைத்து கரும்பு, மஞ்சள் போன்றவைகள் வைத்து சுவாமிக்கு படையலிட்டனா். இதில், கல்லூரி மாணவா்கள் புத்தாடைகள் அணிந்து கலந்துகொண்டனா்.

கல்லூரி வளாகத்தில் மாணவ, மாணவிகளுக்கான பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கல்லூரித் தலைவா் வெங்கடாசலபதி கலந்துகொண்டு மாணவா்களுக்கும், கல்லூரிப் பேராசிரியா்களுக்கும் பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்தாா். விழாவில் கல்லூரி நிா்வாக குழு உறுப்பினா் ரேகா ரெட்டி மற்றும் பேராசிரியா்கள், மாணவா்கள் பங்கேற்றனா்.

Dinamani
www.dinamani.com