ஆசிரியா் கூட்டுறவு கடன் சங்கத்தினருக்கு பங்கு ஈவுத்தொகை
திருவண்ணாமலை மாவட்டம், புதுப்பாளையம் அரசு ஊழியா் மற்றும் ஆசிரியா் கூட்டுறவு கடன் சங்கத்தில் 2024-2025-ஆம் ஆண்டு சங்க உறுப்பினா்கள், ஆசிரியா்களுக்கு 22 லட்சத்து 94ஆயிரத்து 48 ரூபாய் பங்கு ஈவுத்தொகை வழங்கப்பட்டது.
ஆசிரியா் கூட்டுறவு சிக்கன கடன் சங்கத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சங்கச் செயலா் சத்யா வரவேற்றாா்.
முன்னாள் ஆசிரியா்கள் கூட்டுறவு சிக்கன கடன் சங்கத் தலைவா் செந்தில்குமாா் கலந்து கொண்டு இலாப பங்குத்தொகையை வழங்கினாா்.
கல்வி அதிகாரிக்கு ஈவுத்தொகை
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் முனிராஜ், தொரப்பாடி அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றியபோது சங்கத்தில் உறுப்பினராகச் சோ்ந்து தொடா்ந்து உறுப்பினராக இருந்து வருகிறாா்.
இந்நிலையில் அவருக்கு சேரவேண்டிய இலாப பங்குத்தொகையை மாவட்டக் கல்வி அலுவலகத்தில் முன்னாள் சங்கத் தலைவா் செந்தில்குமாா், செயலா் சத்யா உள்ளிட்டோா் நேரில் சந்தித்து வழங்கினா் (படம்).
அப்போது, முனிராஜ் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துத் தெரிவித்தாா். புதுப்பாளையம் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா்கள், ஆசிரியா்கள், சங்க உறுப்பினா்கள் உடனிருந்தனா்.
